வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் மக்கள் அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்– புதிய உத்தரவு

Read Time:4 Minute, 21 Second

Map.Vavuniya.gifANI.newAlert-2.gifஇலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்திலிருந்து வெளிச்செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் 20 ஆம் திகதி முதல் படையினரது அனுமதிப்பத்திரம் பெற்றுச் செல்ல வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் இந்த அறிவித்தல் வவுனியா நகரப்பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கலுக்கான ஏற்பாடுகள் பொலிசாரினாலும், பாதுகாப்புப் படையினராலும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, வவுனியா தேக்கவத்தை, செட்டிகுளம், மன்னார் ஆகிய இடங்களில் அந்தந்த பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பொறுப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் உரிய தற்காலிக பிரயாண அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள், இராஜதந்திரிகள், ஐநா நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் என்பவற்றிற்கு இந்த அனுமதிப்பத்திர நடைமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் உள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிசாரினால் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களின் மூலம் இந்த அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைமுறைக்கு வரவுள்ள இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு செயலாகும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது இந்தநாட்டுப் பிரசைகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற செயலாகும் எனச் சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியிருக்கின்றனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வரும் வரையில் வவுனியா பிரதேசத்தில் குடியிருப்பாளர்களுக்கு பாஸ் அனுமதிப்பத்திர நடவடிக்கை நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பாஸ் அனுமதிப்பத்திர நடவடிக்கை வவுனியாவிலிருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் பிரயாணிகளுக்கே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய பாஸ் அனுமதிப்பத்திர நடவடிக்கையின் மூலம் குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் மூலம் அவர்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக, அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 2 படகுகள் மோதியதில் 50 ராணுவ வீரர்கள் பலி
Next post அப்சல் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு