மொபைல், கணினித் திரையை தொடர்ந்து பார்ப்பதன் அபாயம்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 1 Second

கோவிட்-19 பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளில் மாறுகண் மற்றும் ஒன்றரை கண் பாதிப்பு குழந்தைகள் மத்தியில் எதிர்பாராத அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக முந்தைய ஆண்டு ஒப்பிடுகையில் இந்தாண்டு ஐந்து மடங்கு உயர்ந்து எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது. மேலும் கிட்டப்பார்வை வளர்ச்சி 100% உயர்ந்திருப்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 25% அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கி இருப்பதாக கண் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக நாம் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே தயங்குகிறோம். பார்க் மற்றும் மைதானம் என்று விளையாடிக் கொண்டு இருந்த இவர்கள் கடந்த இரண்டு வருடமாக சூரிய ஒளி படாமல் வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களின் அன்றாட செயல்பாடான பள்ளி செல்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் விளையாடுவது எல்லாம் முற்றிலும் தடைப்பட்டு விட்டது.

விளைவு அவர்கள் உடலில் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து நன்மைகளும் அறவே குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இவ்வளவு நாட்களாக பின் தொடர்ந்து வந்த வாழ்க்கை முறையில் கணினி, தொலைக்காட்சி மற்றும் மொபைல்போன்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டு இருப்பதால் அவர்களின் கண் பார்வையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது.

பள்ளியில் படிக்கும் போது குழந்தைகள் கரும்பலகையை மட்டுமே தான் பார்த்து படிப்பார்கள். அதுவும் ஒரு குறிப்பட்ட தூரத்தில் அமர்ந்திருப்பார்கள். கரும்பலகை அளவிற்கு கணினி அல்லது செல்போனின் திரை பெரிதல்ல. இந்த சின்ன திரையினை கண்களுக்கு மிக அருகே வைத்து பார்ப்பது அதாவது 33 சென்டிமீட்டர் அளவுக்கு குறைவான தூரத்தில் பார்ப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

நாம் பார்க்கின்ற பொருளுக்கும் நம் கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் குறைவாக இருக்கும் நிலையில் வாசிப்பது, எழுதுவது போன்ற செயல்பாடுகளைத் தொடரும் போது அது கிட்டப்பார்வை, மாறுகண் போன்ற நிலையினை ஏற்படுத்தும் என்று குழந்தைகளுக்கான கண் மருத்துவ சங்கம் ஆய்வு நடத்தி கண்டறிந்துள்ளது’’ என்றவர் கண் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார், ‘‘குழந்தைகள் ஒரு பக்கம் ஆன்லைனில் பாடங்கள் படித்தாலும், பெரும்பாலான பெற்றோர்களும் வீட்டில் இருந்தபடியே வேலைப் பார்த்து வருகிறார்கள்.

கிட்டப்பார்வை மற்றும் மாறுகண் பிரச்னை குழந்தைகளை மட்டுமில்லை பெரியவர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. கணினி அல்லது செல்போனில் இடைவேளை இல்லாமல் ஒரு மணி நேரம் தொடர்ந்து செலவிட வேண்டும் என்றால், அவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சின்னதாக இடைவேளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த நேரத்தில் கணினியை பார்ப்பதைத் தவிர்த்து எழுந்து சென்று தண்ணீர் குடிக்கலாம்.

பால்கனியில் பூந்தொட்டிகள் இருந்தால் அதைப் பார்க்கலாம். இதன் மூலம் டிஜிட்டல் திரையை பார்த்து சோர்வடைந்த கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும். மாலை நேரத்தில் வீட்டில் மொட்டைமாடியில் குழந்தைகளை விளையாட விடலாம். இதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி சத்து குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் கிடைக்கும். ஆரோக்கியமான, சமச்சீரான உணவும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வேலைகள் கம்ப்யூட்டர் கொண்டு தான் இயங்கி வருகிறது. அதனால் கண்டிப்பாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும். இதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வளர்ந்து வரும் மருத்துவ துறையில் கண் பார்வையை பாதுகாக்க பல டெக்னாலஜிகள் உள்ளன. கிட்டப்பார்வை வளர்ச்சியினை தடுக்க கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்தலாம். இல்லை என்றால் கண்களை ஆய்வு செய்து அதற்குரிய கண்ணாடிகளை அணியலாம்.

சிலர் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவார்கள். அதே சமயம் பார்வையில் பிரச்னை தீவிரமாக இருந்தால் அதை சரி செய்ய லேசர் சிகிச்சையும் உள்ளது. இந்த பிரச்னையை கண்டுகொள்ள தவறினால், இளம் வயதில் கண்புரை நோய், கண் அழுத்தநோய், கருவிழி பாதிப்பு ஏற்படும். முடிந்த வரை அதிக நேரம் தொலைக்காட்சி, செல்போன் மற்றும் கணினியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி கண்களுக்கான பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனைப்களை மேற்கொள்ளலாம்’’ என்று அறிவுரை வழங்கினார் கண் நிபுணர் டாக்டர் மஞ்சுளா ஜெயக்குமார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானின் தேச கட்டுமானத் தோல்வி: இலங்கை கற்கவேண்டிய பாடங்கள்!! (கட்டுரை)
Next post கொரோனா மருந்துகளால் கல்லீரல் அழற்சி !! (மருத்துவம்)