கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 32 Second

* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் அதை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால் புதியதுபோல் ஆகிவிடும்.

* அடைக்கு ஊறப்போடும்போது துவரம்பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருப்பதோடு வாய்வுத்தொல்லையும் இருக்காது.

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் போட்டு விட, நெய் மணமாகயிருப்பதோடு கசக்கவும் செய்யாது.

* பச்சை மிளகாயை நறுக்கிய உடன், கையை வெந்நீரில் கழுவி விட வேண்டும். இல்லாவிடில் கையில் எரிச்சல் இருந்து கொண்டேயிருக்கும்.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* வெங்காயம், பூண்டு நறுக்கியதும் ஒரு தக்காளியை நறுக்கித் தேய்த்துக் கொண்டால் வாடை வராது.

* அடை மாவில் கற்பூரவல்லி இலைகளை அரைத்துச் சேர்த்தால் மணம் கூடும். உடம்புக்கு நல்லது.

* மாங்காய் சீஸனில் துவையல் செய்யும்போது, புளிக்குப்பதில் மாங்காய் சேர்க்கலாம்.

* கேஸ் அடுப்பு பர்னரை, எலுமிச்சைச்சாறு தடவித் தேய்த்துவிட்டுத் துடைத்தால் செம்பட்டை நிறம் படியாது.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

* வெள்ளை ரவையுடன், உப்பு, மிளகு, சீரகத்தூள், தேங்காய்ப்பால், தேவையான அளவு வெந்நீர் ஊற்றிப் பிசைந்து தேன்குழல் அச்சில் நிரப்பி காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தால் சுவையான தேன்குழல் தயார்.

* பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து பெருங்காயம், பூண்டு, வெங்காயம் அதனுடன் தேவையான உப்பு, தக்காளி, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணைபிரிந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். சுவையான சத்தான ‘பூண்டு சப்ஜி’ இட்லி, தோசைக்கு அருமையான இணை.

* மைதா மாவுடன், உப்பு, மிளகாய்த்தூள், துருவிய கேரட், தயிர், கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பூரிகளாக இட்டுப் பொரித்தால், சுவையான ‘கேரட் பூரி’ தயார்.

– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி .

* எந்த சுண்டல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டை சீவித்துருவலை கலந்து செய்தால் சூப்பராக இருக்கும்.

* துவரம்பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

– ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை .

* முட்டைகோஸை இஞ்சியுடன் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தயிருடன் அரைத்தால் பச்சடி நன்றாக இருக்கும்.

* பிரஷர் குக்கரைப் பயன்படுத்தும்போது குக்கரில் வைக்கப்படும் தண்ணீரில் ஒரு சிறிய துண்டு எலுமிச்சை பழத்தைப் போட்டு விட்டால் பிரஷர் குக்கரின் உட்புறம் நிறம் மாறாமல் இருக்கும்.

– ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.

* இட்லி மாவில் உளுந்துக்குப் பதிலாக சோயா மொச்சையைப் பயன்படுத்தினால் அதிகச்சத்து கிடைக்கும். செலவும் குறைவு.

* வாழைத்தண்டு பொரியல் செய்யும்போது, 1 டீஸ்பூன் பச்சரிசி, 1 டீஸ்பூன் உளுந்து, 4 மிளகு, ஒரு மிளகாய் வற்றலை வறுத்துப் பொடி செய்து தூவிக் கிளறி இறக்கினால் சுவையாக மணமாக இருக்கும்.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

* மிக்ஸி பிளேடு கூர் மழுங்கிவிட்டால் ஜாரில் சிறிது கல் உப்பை போட்டு ஓட விடவும். பிளேடு கூர்மையாகும்.

* சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாகவும், கீறினால் வெள்ளையாக இருப்பது நல்ல கிழங்கு!

– கே.ஆர்.ரவீந்திரன், சென்னை.

* பாத்திரத்தை முதல் இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து பாலைக் காய்ச்சிவிட்டு, பிறகு திறந்து வைத்துக் காய்ச்சினால் விரைவில் காய்ந்துவிடும். கேஸ் மிச்சமாகும்.

* மோர் புளித்துவிட்டால் அதில் ஒரு பங்கு தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்துவிட்டால் ஒருமணி நேரத்தில் தண்ணீர் மேலாக நிற்கும். அதை அப்படியே வடித்துவிட்டால் மீதமுள்ள மோர் புளிக்காமல் இருக்கும்.

* இட்லி அவிக்கும் பாத்திரத்திலுள்ள சுடுநீரில் காய்ந்த கறிவேப்பிலையைப் போட்டு இட்லியை அவித்தால் இட்லி வாசனையுடன் இருக்கும்.

– ச.லெட்சுமி, செங்கோட்டை.

கிருஷ்ண சக்கரம்

தேவையானவை:

பொட்டுக்கடலை மாவு – 400 கிராம்,
அரிசிமாவு – 400 கிராம்,
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்,
நெய் – 100 கிராம்,
உப்பு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும். பிறகு நெய் விட்டு பிசையவும். அதன் பின் உப்பு, பெருங்காயத் தூள் நீரில் கரைத்து சிறிது சிறிதாக மாவில் விட்டு நன்றாக கெட்டியாக பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் உருட்டிக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து கம்பிப் போல் திரித்து வட்டமாக சுற்றவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சுருட்டிய சக்கரங்களைப் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகள் ஜலதோஷம்…பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?! (மருத்துவம்)