அச்சம் தவிர்…ஜிகா வைரஸும் குரங்கு வைரஸும்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 25 Second

நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் மெல்ல மெல்லப் பரவி வருகிறது. இதனால் தமிழகத்துக்கும் ஜிகா வைரஸ் ஊடுருவலாம் என்றஅச்சம் எழுந்துள்ளது. ஜிகா வைரஸைப் பொருத்தவரை உயிர் ஆபத்தை ஏற்படுத்துமளவு தீவிரமானதல்ல என்றே நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் ஜிகா வைரஸ் குறித்து தேவையற்ற பீதி அடைய வேண்டியதில்லை.

மலேரியா, டெங்கு போல கொசுக்களாலேயே ஜிகா வைரஸும் பரவுகிறது. அதனால் நம் சுற்றுப்புறத்தை கொசுக்கள் அண்டாமல் பார்த்துக் கொண்டாலே போதும். பாலியல் உறவு, ரத்தப்பரிமாற்றம் போன்ற காரணங்களாலும் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கர்ப்பிணிகள் ஜிகா வைரஸால் பாதிக்கப்படும்பொழுது, குழந்தையின் தலை அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு பிறக்கக் கூடும். எனவே, கர்ப்பிணிகள் ஜிகா வைரஸ் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

எனவே காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வேனிற்கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோல் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் குரங்கு பி வைரஸ் குறித்தும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. சீனாவின் பெய்ஜிங்கில் குரங்குக்கு சிகிச்சையளித்த கால்நடை மருத்துவருக்கே Monkey B Virus ஏற்பட்டுள்ளது.

வைரஸ்கள் உருமாறிக் கொண்டே இருப்பதும் அதற்கு மருத்துவ உலகமும் புதுப்புது பெயர் வைப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அவை ஊடகங்களிலும் பரபரப்பூட்டும் செய்தியாக வலம் வரும். எனவே, நம்மிடம் ஏற்பட வேண்டியது விழிப்புணர்வுதானே தவிர அச்சம் அல்ல!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனா மருந்துகளால் கல்லீரல் அழற்சி !! (மருத்துவம்)
Next post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!! (அவ்வப்போது கிளாமர்)