நீரிழிவு!! (மருத்துவம்)
Read Time:1 Minute, 3 Second
நீரிழிவுப் பிரச்னை உள்ள எனக்கு அடிக்கடி பல்லில் சொத்தை ஏற்படுகிறது. சர்க்கரை உணவுகளை தொடாத போதும் ஏன் இந்தப் பிரச்னை?
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் ஜெய் கணேஷ்
சர்க்கரை சாப்பிடுவதால்தான் பற்களில் சொத்தை ஏற்படும் என்பதில்லை. உடலில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலும் பற்கள் சொத்தையாகும். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். பற்கள் சொத்தையாவதைத் தவிர்க்க, முறையான இடைவெளியில் பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒரு முறையாவது பற்களை பரிசோதனை செய்து, பல் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றினால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
Average Rating