கர்ப்ப கால சர்க்கரை நோயை தடுப்பது எப்படி? (மருத்துவம்)

Read Time:3 Minute, 1 Second

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை, ஆலோசனை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. திட்ட மிட்ட உணவு முறையால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம். நொறுக்கு தீனி சாப்பிடுவதைப் போல உணவை பிரித்து சாப்பிட்டு பழக வேண்டும்.

முதல் குழந்தை தரித்தபோது, சர்க்கரை நோய் இல்லாமல் இருந்து, 2வது குழந்தையை தரிக்கும்போதும் சர்க்கரை நோய் வராது என்று சொல்ல முடியாது. சர்க்கரை நோய் வரலாம். முதல் பிரசவத்திற்கு பிறகு உடல் பருமன் பிரச்னையும் ஏற்படலாம். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடலாம்.
எனவே, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை மேற்கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

சர்க்கரை நோய் வந்தவர்கள் அதிக தூரம் நடப்பது இல்லை. இதன் காரணமாக நோயின் பாதிப்பு அதிகரிப்பதோடு, உடலில் இன்சுலின் சுரப்பதும் தடைபடுகிறது. இதைத் தவிர்க்கவே உடற்பயிற்சியோடு, நடப்பதற்கும் நோயாளிகள் முன்வர வேண்டும். தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது மிகவும் அவசியம். மெதுவாகவோ அல்லது சிறிது வேகமாகவோ ஓடுவதும் நல்லது. நீச்சல், விரைவு நடை பயிற்சி செய்தால் நன்மை பயக்கும்.

வராது… வந்துவிட்டால் டென்ஷன் ஆகாதீங்க

சர்க்கரை நோய் என்பது இப்போது சர்வசாதாரணமாக எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக மாறி வருகிறது. பரம்பரையாக வருவதோடு, உணவு பழக்கத்தாலும் பலரை பாதிக்கிறது. இந்த நோய் வரக்கூடாது. வந்துவிட்டால், கவலை வேண்டாம், சமாளிக்கலாம் நன்றாக வாழலாம். இதோ சில எளிய வழிகள்:

மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யுங்கள். சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் மருந்து மாத்திரைகள் சாப்பிடவும்.

காலை, மதியம், மாலை, இரவு என்ற அடிப்படையில் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

கீரை, காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும். கிழங்கு வகை உணவை தவிர்க்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்!! (மருத்துவம்)