சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம்’!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 28 Second

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில் போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.

இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை கொண்டவை. வேர் கசப்பானது. இதன் தாவரவியல் பெயர் கிமீரீறீமீ Aegle marmelos roxb.. இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. இந்த தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

வில்வ மரத்தின் பாகங்கள் காய்ச்சல், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. சிறந்த காலரா தடுப்பு மருந்தாகவும் இது செயல்படுகிறது. வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர கழிச்சல், மூலநோய் நிற்கும். இலையை இடித்து பிழிந்த சாற்றில் பசுவின் பால் விட்டு கொடுத்தால் சோகை, வீக்கம் போகும்.

வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியம். ஆண்மை அளிக்கும். வில்வ வேர் பட்டையை பச்சையாக 10 கிராம் எடுத்து ஒரு கிராம் சீரகத்துடன் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் தாது பலப்படும். இதன் மூன்று இலைகளை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட் செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். நல்ல ஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவு பொருட்களிலுள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து வலுப்பெற செய்கிறது.

வேர், பட்டை, இலை ஆகியவற்றில் எதையாவது ஒன்றை சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கல்யாணமுருங்கை சாறு அதே அளவு எடுத்து கலந்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதுபோல் இதன் காய் தூளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து உண்டால் ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும்.

வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி, பசியின்மை குணமாகும். 2, 3 பச்சை இலைகளை தினந்தோறும் காலையில் தின்று வர நீரிழிவு, ஆஸ்துமா நோய்கள் கட்டுப்படுகிறது, கோழைகட்டாது. வேர்ப்பட்டையை கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் தணிகிறது. பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்து வர உடலில் வெப்பம் தணியும். இதனால் அதிக வேர்வை ஏற்படுவது குறைகிறது. மலச்சிக்கல் வராது.

வில்வ மரத்தின் பட்டை மற்றும் பிசின் பல்வேறு நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மிகச்சிறந்த மூலிகை மரமான வில்வம் தற்போது சாதாரண இடங்களில் காண்பது அரிதாகிவிட்டது. இது தானாக வளர்வது அரிது. விதைகளை நடவு செய்து தான் வளர்க்க வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரம் தற்போது சிவன் கோயில்கள் மற்றும் சில மூலிகை பண்ணைகளில் மட்டுமே உள்ளன. இதன் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் இம்மரம் கைவிடப்பட்டாலும், ஆன்மிக காரணங்களுக்காக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களை எளிதாக குணப்படுத்தும் வில்வ மரத்தை அழிவு பட்டியலில் இருந்து மீட்டு அனைத்து இடங்களிலும் வளரச்செய்ய வேண்டும்.

இரண்டு வேளைக்கு மேல் மூலிகைசாறு வேண்டாம்

வில்வம், அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு இலையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்பளர் (250 மில்லி) தண்ணீர் விட்டு சட்டினி போல் அரைத்து அதை சுத்தமான வெள்ளை துணியில் ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு வெல்லம் அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். சில இலைகள் சில நோய்களை முற்றிலும் குணப்படுத்தும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு மேல் மூலிகை சாறு குடிக்க கூடாது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு நம் கையில் தான் உள்ளது.

மூலிகை சூப்

வில்வ இலை அல்லது மற்ற மூலிகை இலைகளை சாறு எடுத்து பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம். இந்த சாறு ஒருவருக்கு ஒரு நேரத்திற்கு போதுமானது.

Tags:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதும்டா சாமி முடியல!! (வீடியோ)
Next post சிறுநீரக கற்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்!! (மருத்துவம்)