கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் திசு பாதிக்கும் ஆபத்து!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 32 Second

கோவிட் தொற்று பரவல் காரணமாக நாம் நம் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ‘உங்கள் நுரை
யீரலை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 2021-ம் ஆண்டு உலக நுரையீரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை நிறுத்துங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், சுத்தமான காற்றை சுவாசியுங்கள், வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள் என்பதை முக்கிய வழிகாட்டுதலாக இந்த ஆண்டு உலக நுரையீரல் தினம் வலியுறுத்துகிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து ஒருவர் குணமடைந்தாலும் அதன் காரணமாக நுரையீரல் சம்பந்தமான பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிகுறிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்த சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட நீடிக்கலாம். அதன் பாதிப்பு என்பது ஒரு வருடத்திற்குகூட இருக்கலாம். இதனால் நுரையீரலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் நுரையீரல் திசுக்களில் பாதிப்பு அல்லது காயங்களை ஏற்படுத்தலாம்.

நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோய் நுரையீரல் பைப்ரோசிஸ் (Fibrosis) என்று அழைக்கப்படுகிறது. இது கோவிட் பாதிப்புக்கு பிந்தைய அனைத்து நோயாளிகளிலும் 5 சதவீதம் இருக்க வாய்ப்பு உள்ளது. இது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்பாகும்.

வைரஸ் நுரையீரலுக்குள் நுழையும்போது இந்த நிலை ஏற்படுகிறது, இதன் காரணமாக தொற்று ஏற்படுகிறது மற்றும்அல்வியோலி (Alveoli) வீக்கம் அடைகிறது. சுவாசத்தின்போது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது நுரையீரல் மற்றும் ரத்தம் ஆகியவை ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை பரிமாறிக் கொள்ளும் இடம் அல்வியோலி ஆகும்.

நுரையீரல் வீக்கம் என்பது கொரோனா பாதிப்பால் ஏற்படும் தொடர்ச்சியின் அறிகுறியாகும். இது மிதமானது முதல் தீவிரமான மற்றும் அதில் இருந்து மீள முடியாத நிலைமைகள் வரைகூட இருக்கலாம். இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், கொரோனா பாதித்து குணமடைந்த ஒருவருக்கு சில மாதங்களுக்கு பின்புகூட இந்த அறிகுறிகள் ஏற்படலாம். கொரோனாவிலிருந்து குணமடையும் நோயாளிகளின் சுவாசத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன.

இது முறையாக கவனிக்கப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கடுமையான அறிகுறிகளுடன் தொடர்புடைய இந்த நிலை நுரையீரல் வீக்கம், வைரசால் ஏற்படும் நிமோனியா, அதிக ஆக்ஸிஜன் ஓட்டம் மற்றும் நுரையீரலில் ரத்தம் உறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட காரணமாகிறது. நுரையீரல் வீக்கம் பெரிதான நிலையில், அதற்கான முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அதிலிருந்து மீள முடியாத நிலை ஏற்படும். நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்துவது என்பது ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதற்கு அவர் முறையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சையை பொறுத்து அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடம்புளி பற்றி தெரியுமா?! (மருத்துவம்)
Next post கூஜாக்களும் ராஜாக்களும் !! (கட்டுரை)