பூண்டு கனவா பிரட்டல்!! (மகளிர் பக்கம்)
Read Time:54 Second
வெட்டிய கனவா துண்டு – 1/2 கிலோ,
செக்கெண்ணை – 25 கிராம்,
சீரகம் – 10 கிராம்,
காய்ந்தமிளகாய் – 5,
இடிச்ச பூண்டு – 50 கிராம்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவைக்கு,
சாம்பார் வெங்காயம் – 6.
தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க…
காய்ந்தமிளகாய்,
தனியா,
சீரகம்,
மிளகு,
இஞ்சி,
பூண்டு – தலா 25 கிராம்.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி அரைத்த மசாலாத்தூள், கனவா மீன், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Average Rating