கோவிட் கால கருத்தரிப்பு!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

கொரோனா தொற்று சம்பந்தமாக இன்னும் முழுமையான விவரங்கள் இல்லாத காரணத்தால் கர்ப்பத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் இன்னும் தெளிவான முடிவுகள் இல்லை. இதேபோல் கர்ப்பிணிகள் வைரசால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதும் செவிவழி செய்திகளே.
தொற்றுநோயின் துவக்கத்தில் மூடப்பட்ட பெரும்பாலான கருவுறுதல் மையங்கள் தற்போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்படுகின்றன.

இனப்பெருக்க தொழில்நுட்ப உதவியை (ART) பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், தற்போது என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து உங்களுக்கு அருகிலுள்ள கிளினிக்குகளை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை கொரோனா பரிசோதனையின்போது உங்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் கர்ப்பம் தரிப்பதைத் தவிர்க்கவும், கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சையை துவங்குவதற்கு முன் நோய் குறையும் வரை காத்திருக்க வேண்டும்.

தாம்பத்யத்தால் கோவிட் பரவுமா?!

விந்தணுவிலிருந்து கோவிட் -19 தொற்று பரவ வாய்ப்பு உள்ளதா என்று பொதுவான ஒரு கேள்வி அனைவரிடமும் எழுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படியும், ஆரம்பநிலை தரவுகளின் படியும் கோவிட்-19 தொற்றானது பாலியல் ரீதியாக அதாவது விந்து அல்லது யோனி திரவங்கள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை. அமெரிக்க இனப்பெருக்க மருத்துவ அமைப்பு கூற்றுப்படி, உறைந்த முட்டை அல்லது விந்து ஆகியவற்றில் கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கிறது.

கர்ப்பத்தை கையாள்வது

* கர்ப்ப காலத்தில் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியமில்லை. பிறக்கும்போதே கோவிட் பாதிப்புடன் பிறந்த சில குழந்தைகளில், அம்னோடிக் திரவம், தொப்புள் கொடி அல்லது நஞ்சுக்கொடி ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

குழந்தைகள் மீதான தாக்கம்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூற்றுப்படி, வைரஸ் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு அதிக ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை. பெரியவர்களை விட அவர்கள் முற்றிலும் அறிகுறி இல்லாதவர்களாகவும், கடுமையான அறிகுறிகளை அனுபவிக்காமலும் இருக்கவே வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…! (அவ்வப்போது கிளாமர்)
Next post தாய்ப்பால் மூலம் கோவிட் 19 பரவுமா?! (மருத்துவம்)