மன்னார் மீனவர்களின் உடல்கள் கண்டெடுப்பு…கிழக்கு மாகாணத்திற்கு புதிய படைத்துறை தளபதி..

Read Time:3 Minute, 20 Second

srilanka.3.jpgஇலங்கையின் வடக்கே மன்னார் பேசாலையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் கடலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வட கடலில் கற்கடந்த தீவுக் கடற்பரப்பில் இவர்கள் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்றதாகவும், உரிய நேரத்தில் அவர்கள் திரும்பி வராததையடுத்து இன்று அவர்களைத் தேடிச்சென்ற உள்ளுர்; மீனவர்கள், அவர்கள் இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் தமது படகில் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளார்கள்.

இறந்தவர்களுடைய படகுமீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அடையாளம் காணப்பட்டதாகவும், அதனைக் கட்டி இழுக்க முடியாத அளவிற்கு அது சேதமடைந்திருந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் சடலங்கள் பேசாலைக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, மன்னார் மாவட்ட நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் அங்கு சென்று சடலஙகளைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அவற்றை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையில் யாழ் குடாநாட்டில் வடமராட்சி வதிரியிலும், திருநெலவேலியிலும் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட இருவெறு தாக்குதல் சம்பவங்களில் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்து இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு புதிய படைத்துறை தளபதி

இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தின் படைத்துறை தளபதியாக மேஜர் ஜெனரல் சனத் கருனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குறித்த பதவியை எதிர் வரும் புதன் கிழமை இவர் பொறுப்பேற்க விருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே முகமாலை பிரதேசத்தை உள்ளடக்கிய 55 வது இராணுவ படைப் பிரிவின் கட்டளை தளபதியாக கடந்த செப்டெம்பர் 12 வரை இவர் பணியாற்றியதாகவும் புதிய பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சமல் குணரத்ன நியமிக்கப்படடுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க ராக்கெட்டில் மீண்டும் ஒரு இந்திய பெண் விண்வெளிக்கு பயணம்
Next post முஷாரப்புடன் ஒருபோதும் தொடர்பு இல்லை: பேநசீர், ஷெரீப் கூட்டாக அறிவிப்பு