துருக்கி நாட்டில் பயங்கர வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Read Time:1 Minute, 5 Second

Turkey.Map.2.jpgதுருக்கி நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் புயல் சின்னம் ஏற்பட்டதை அடுத்து துருக்கியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 235 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். ஆறுகளில் அபாய அளவைதாண்டி தண்ணீர் ஓடுகிறது. விவசாய பயிர்கள் நாசமடைந்து விட்டன. இருப்பினும் உயிரிழப்பு பற்றி தகவல் ஏதுமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில்
Next post சிறீ.ல.சு.க – ஐ.தே.க. இடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒப்பந்தம் இன்று கைச்சாத்து !