By 1 December 2021 0 Comments

முதுமையிலும் தாம்பத்யம்!! (அவ்வப்போது கிளாமர்)

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட சர்வேயில் முதுமையிலும் செக்சில் அதிக பாடு கொண்டவர் கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர்.ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப் பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே செக்சில் படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.சத்தான ஆகாரமும், பயிற்சியும் எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கி யமோ அதுபோல செக்சும் தேவை. அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் டாக்டர்கள் அதற்கான முன் முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செக்ஸ் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக் குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.

யுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிகைகளும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால் எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.

பாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam