பாகிஸ்தானில் தினமும் ரூ.1000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்

Read Time:2 Minute, 51 Second

pakistan_flag.gifபாகிஸ்தானில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிச்சைக்காரர்கள் பெருத்துப் போய்விட்டார்கள். காணும் இடங்களில் எல்லாம் அவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டனர். அந்த நகரின் மார்க்கெட் பகுதியில் சிறுவர்கள், நிர்வாணக்குழந்தைகளை இடுப்பில் சுமந்து கொண்டு இருக்கும் சிறுமிகள், கர்ப்பிணிப்பெண்கள், உடல்ஊனமுற்றோர் என்று பிச்சைக்காரர்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் பிச்சை கேட்டு மக்கள் பின்னாடியே விரட்டிக் கொண்டு செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அவர்கள்அதிக அளவு தொந்தரவு செய்கிறார்கள். அவர்களிடம் அமெரிக்க டாலராக பிச்சை போடும்படி வற்புறுத்துகிறார்கள்.

பிச்சைக்காரர்களால் மக்களுக்கு ஏற்படும் தொந்தரவை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. அவர்களிடம் தயாள குணத்துடன் போலீசார் நடந்து கொள்கிறார்கள். மார்க்கெட்டு பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்களிடம் திருடுவதும் வழக்கமாக இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.1000

பிச்சைக்காரர் ஒருவர் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 300 வரை சம்பாதிக்கிறேன் என்று நிருபர்களிடம் கூறினார். இது ஒரு தொழிலாளி சம்பாதிப்பதை விட பலமடங்கு அதிகம் ஆகும்.

பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து அவர்களை அப்புறப்படுத்துவதற்காக பிச்சைக்காரர்கள் ஒழிப்பு குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் மாஜிஸ்திரேட்டு இடம் பெற்று உள்ளனர். திருட்டில் ஈடுபட்ட 15 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 வாரங்களில் 276 பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் புலிகளுக்கு இலங்கை அரசு வேண்டுகோள்
Next post வங்கதேசத்தில் படகு விபத்து : 50 பேர் பலி!