உங்கள் குழந்தை இரண்டாவது வகையா? (மருத்துவம்)

Read Time:4 Minute, 20 Second

ஓ பாப்பா லாலி

குழந்தைகளின் உலகம் எண்ணற்ற அற்புதங்களாலும், ஆனந்தங்களாலும் நிறைந்தது. யாரிடமும் எளிதாகப் பழகிவிடுவது, குறும்புத்தனம், படைப்புத்திறன், கற்பனைகள், விளையாட்டு என அவர்களின் மகிழ்ச்சி எல்லை இல்லாமல் விரிந்துகொண்டே இருக்கும்.

ஆனால், இவர்களுக்கு நேர்மாறாக சில குழந்தைகள் பயம், தனிமை, அழுகை, கூச்ச சுபாவம் என யாரோடும் ஒட்டாமல் வாழும் இரண்டாம் வகையும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பனிடம் கேட்டோம்.

‘‘Social anxiety disorder என்ற சமூக பயம் கொண்ட குழந்தைகளே இதுபோல் யாரிடமும் ஒட்டாமல் இருப்பார்கள். எல்லா குழந்தைகளுக்கும் ஒருவிதமான கூச்ச சுபாவம் இயல்பாகவே இருக்கும். ஆனால், அதற்கும் Social anxiety disorder-க்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

Social anxiety disorder உள்ள குழந்தைகளுக்கு மனதில் அதீத பயம் இருக்கும். இவர்கள் விழாக்கள், பண்டிகைகள் என மற்றவர்களுடன் நெருங்கிப் பழகி, கலந்துரையாட வேண்டிய சூழலை முடிந்தவரைத் தவிர்ப்பார்கள். பள்ளிக்கூட விழாக்களில் பேசுதல், வகுப்பறையில் மற்றவர்கள் முன்னால் போர்டில் எழுதுதல் என எதுவாக இருந்தாலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருப்பார்கள்.

அதேபோல் உறவினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும்போது அந்த சூழலுடன் இந்த குழந்தைகளால் எளிதில் பொருந்திப் போக முடியாது. கூட்டத்துக்கு முன்பு நாம் செய்வது தப்பாக போய்விடுமோ என பயந்துகொண்டே இருப்பார்கள். இந்த உணர்ச்சி கொந்தளிப்பு காரணமாக நெஞ்சு படபடத்தல், கை வியர்த்தல், கால்கள் நடுங்குதல், சிறுநீர் வெளியேறுதல் என பலவிதமான தொந்தரவுகள் உடலில் தோன்றும்.

சாதாரண கூச்ச சுபாவம் நாளடைவில் மாறிவிடும். ஆனால், சோஷியல் போபியா கொண்ட குழந்தைகளின் குணம் மாறாது. தொடர்ந்து பொது இடங்கள், உறவினர்கள் வீடு போன்றவற்றுக்கு செல்வதைத் தவிர்ப்பது, புதிய நபர்களைப் பார்க்கும்போது அழுவது, பெரியவர்களின் கால்களை இறுகக் கட்டிக்கொள்வது, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து நீடிக்கும்.

சோஷியல் போபியா காரணமாக இவர்களால் சரியாக படிக்கவும் முடியாது. மற்ற குழந்தைகளுடன் நட்புறவையும் பேண முடியாது. அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளே பெரிதும் தடைபடும்.

குழந்தைகளின் வழக்கத்துக்கு மாறான இந்த சோஷியல் போபியாவின் குணங்கள் 6 மாதங்களுக்கும் மேல் நீடித்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்தான் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். எனவே, அவர்களுக்குத்தான் சோஷியல் போபியா பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவை.

இந்த பாதிப்பு உடைய குழந்தைகளை எந்தக் காரணத்துக்காகவும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அதனால் எந்தவித பயனும் கிடைக்காது. தேவையான மருத்துவ ஆலோசனை, நடத்தை மாற்று சிகிச்சைகள் கொடுப்பதன் மூலமே குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர முடியும்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணுக்கு உதவிய வயாகரா!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஊட்டச்சத்து பானங்களின் விளம்பர உதார்!! (மருத்துவம்)