பாப்பாவை பார்த்துக்கங்க.. பாப்பாவை பார்த்துக்கங்க..!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 0 Second

‘நமது நாட்டில் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் சென்றுதான் பச்சிளம் குழந்தை தொடர்பான மருத்துவம் படித்து வந்தனர்’’ என்ற தகவலோடு பேசத் தொடங்குகிறார் பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் ஆனந்த். பச்சிளம் குழந்தை பராமரிப்பின் முக்கியத்துவம், அதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பற்றி நம்மிடம் அவர் கூறியதிலிருந்து…‘பிறந்த 10 நிமிடத்தில் ஒரு குழந்தை அழத்தொடங்கினால், அக்குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அந்த குழந்தைகளின் மூளைக்கு ஆக்சிஜன் சென்று விட்டது என்றே அர்த்தம்.அதேவேளையில், பச்சிளம் குழந்தையின் மூளைக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், அக்குழந்தை அழாது. மூளைக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் செல்லாத காரணத்தால். அதன் உடம்பின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறிவிடும். இதனை, பச்சிளம் குழந்தை மருத்துவர்கள் Cyanosis என்று குறிப்பிடுவார்கள்.

குழந்தையின் உடம்பு நீலநிறமாக மாறுவதைத் தொடர்ந்து, அதன் கை மற்றும் கால்கள் அசைவது(Grimace Refleexs) நின்று விடும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ள குழந்தைகள் மூக்கில் சக்‌ஷன்(Suction) பொருத்தினால், அதை தள்ளிவிடும். மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்கிற குழந்தைகள் அதனைத் தள்ளாது.இதுமாதிரியான குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை மருத்துவரின்(Neonatologist) தொடர் கண்காணிப்பு அவசியம் தேவை. இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பச்சிளம் குழந்தை கண்காணித்தல் வாரம்(New Born Care Week) கடைப்பிடிக்கப்படுகிறது.

பச்சிளம் குழந்தையின் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்தால், அந்தக் குழந்தை வளரவளர, அதனுடைய மூளை சீரான வளர்ச்சி அடைவதில் பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஆக்சிஜன் போகாத காரணத்தால், மூளை செல் பாதிப்பு அடையும். இதுபோன்ற பாதிப்புகள் உள்ள குழந்தைகளை, மருத்துவ உலகில் Cereberal Palsy என்று குறிப்பிடுவோம்.எந்தவித பாதிப்பும் இல்லாமல், இயல்பாக பிறக்கும் குழந்தையின் APGAR ஆனது ஒரு நிமிடத்துக்கு 8/10-வும், 5 நிமிடத்திற்கு 9/10-வும் காணப்படும். உடலில் ஏதேனும் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இந்த ஸ்கோர் அளவு குறையும்.

அந்த சமயத்தில், நாங்கள் அந்தக் குழந்தைக்கு செயற்கை சுவாசம் தருவோம். இந்த செயற்கை சுவாசத்தில், Bag And Mask Ventilation, PPV, Intubation என மூன்று பிரிவுகள் உள்ளன. இவற்றின்மூலம், மூளைக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதை சரிசெய்யலாம். இதன் பின்னர், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.இந்த சிகிச்சை முறை, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை, செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தை, தாயிடம் உள்ள சில பிரச்னைகளால் பாதித்த குழந்தைகள் ஆகியோருக்குத் தேவைப்படும். இந்த சிகிச்சை முறைக்கு Hypoxia எனப் பெயர்.செயற்கை சுவாசம் தரப்படுகிற குழந்தைகளைNICU-வில்(Neonatal Intensive Care Unit) வைத்து முழுமையாக குணமாகும் வரை கண்காணிக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வென்டிலேட்டரைப் பொருத்த வேண்டும். பிறந்து 34 வாரம் முடிவடையாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சை தொடர்ந்து தர வேண்டியிருக்கும். அதற்கான காலத்தை உறுதியாகச் சொல்ல முடியாது.

பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் நன்றாக குடித்து, சிறுநீர், மலம் ஆகியவற்றை சரியான நேரத்தில் நன்றாக கழித்தால் உடனே டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். Neonatology Intensive Care Wing அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக, New Born Care Week கடைப்பிடிக்கப்படுவது வெளியே நன்றாக தெரிகிறது.பச்சிளம் குழந்தைகளைப் பராமரிப்பதில், மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது இல்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள் சொல்லும் அனுபவ வைத்தியத்தையும், மேலோட்டமான ஆலோசனைகளையும் பலர் பின்பற்றுகிறார்கள். முக்கியமாக, நாட்டு மருந்து மற்றும் பொதுவான மருந்துகளைத் தருகிறார்கள்.அவ்வாறு செய்யும்போதுதான் தவறு ஆரம்பிக்கிறது. தாய்ப்பால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அடிப்படையானது. அதிலும், முதல் இரண்டு நாட்கள் வருகிற பால்(Clostrum) நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கொண்டு இருக்கும். எனவே, இதைத் தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. 6 மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம் புகட்ட வேண்டும்.

சில வீடுகளில் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்ற பெயரில், குளிக்க வைத்த பிறகு, வாயோடு வாயாக வைத்து ஊதுவார்கள். பால் எடுக்கிறோம் என்ற பெயரில், நெஞ்சை அழுத்துவார்கள். மூக்கில் எண்ணெய் விடுவார்கள். குழந்தையை தலைகீழாக பிடித்து ஆட்டுவார்கள். இவை எல்லாம் தவறான வழிமுறைகள். எனவே, இவற்றை மறந்தும் செய்யக் கூடாது.பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில், இளம் தாய்மார்களின் உடல்நலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்து விடுவார்கள்.பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள். பால் புகட்ட வேண்டும் என்பதற்காக, சரியாக தூங்க மாட்டார்கள். இளம் தாய்மார்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.சத்தான உணவுவகைகளை நிறைய சாப்பிட வேண்டும். பத்திய சாப்பாடு என்ற பெயரில் களி சாப்பிடக் கூடாது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் அடிக்கடி எரிச்சல் படுவார்கள். தூக்கம் இன்மையால் வரும் இடையூறுகளுக்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம். பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிற இந்த நிலையில், இது எல்லாக் குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். பெரியவர்கள், குழந்தை களுக்கு ஏற்படுகிற பாதிப்புகள் பற்றி பலவிதமான ஆலோசனைகள் கூறுவார்கள்.. ஆனால், டாக்டரிடம் குழந்தையைக் காண்பித்து, அந்தப் பாதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வயது வரை தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகளைத்தவறாமல் போட வேண்டும்’’ என்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா? (அவ்வப்போது கிளாமர்)
Next post தடுப்பு மருந்துகளும் சந்தேகங்களும்!! (மருத்துவம்)