குடி குடியைக் கெடுக்கும்… ஃபீடிங் பாட்டில் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!! (மருத்துவம்)

Read Time:7 Minute, 28 Second

வேண்டாம்… வேண்டாம்… அமெரிக்காவில் நடந்தது போல, குழந்தைகளுக்கான தயாரிப்புகளை வயது வந்தவர்கள் பயன்படுத்துவது நம் நாட்டிலும் நிறைய நடக்கிறது. இது சரிதானா? குழந்தைகளுக்கான பொருட்களில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்? குழந்தைகள் நல மருத்துவரான ஜெ.விஸ்வநாத்திடம் கேட்டோம்.

‘‘குழந்தைகளுக்கான தயாரிப்பு பாதுகாப்பானதாக இருக்கும் என்று பலரும் பயன்படுத்துகிறார்கள். சிலர் அதை ஒரு ஆடம்பரமாகவும் பயன்படுத்துவது உண்டு. நம் சருமத்தின் தன்மைக்கேற்ற காஸ்மெட்டிக்ஸ் பொருட்களையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதே சரியானது.குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. அதற்கு ஏற்றவாறு, சோப், பவுடர், ஆயில் முதலானவை தயாரிக்கப்படுகின்றன. வயது வந்தவர்களின் சருமம் நிறம் மாறியும், சற்று சுருக்கமாகவும் காணப்படும்.

ஆகவே, குழந்தைகளுக்கான அழகு சாதனப் பொருட்களை நாம் பயன்படுத்துவது சரியானது அல்ல. அப்படியே பயன்படுத்தினாலும் மிதமாக பயன்படுத்தினால் பிரச்னை இல்லை. அமெரிக்காவில் அந்தப் பெண்மணி அளவுக்கு அதிகமாகி பயன்படுத்தியிருக்கலாம். இதுபோல, அளவு கடந்த பயன்பாடு பிரச்னைகளை உருவாக்கும்’’ என்கிற டாக்டர் விஸ்வநாத், ஃபீடிங் பாட்டில் பற்றிய சில விஷயங்களையும் கூறுகிறார்.

‘‘1970களில் ஃபீடிங் பாட்டில் பிரபலமாகத் தொடங்கியது. அப்போது தாய்ப்பாலின் பயன்கள் தெரியாமல் இருந்தது. அதன்பிறகு, கடந்த 25 ஆண்டுகளாகத்தான் தாய்ப்பால் மகத்துவம் புரிந்து, தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர்.குழந்தைப் பருவத்தில் இருந்து உடல் நலம் மற்றும் உடல் உறுதியைப் பேணி பாதுகாக்க வேண்டும்.

குழந்தை நல மருத்துவர்கள் பொதுவாக ஃபீடிங் பாட்டிலை உபயோகப்படுத்துங்கள் என்று அறிவுறுத்துவது கிடையாது. ஏனென்றால், குடி குடியைக் கெடுப்பதைப்போல, ஃபீடிங் பாட்டில் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். குழந்தைகளுக்குத் தண்ணீர் புகட்டவும், பால் கொடுக்கவும் ஃபீடிங் பாட்டிலை பயன்படுத்துவதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், இந்தப் பாட்டிலை பயன்படுத்தும் முறையை தெரிந்துகொள்வது அவசியம். குழந்தைகளுக்கு ஒரே பாட்டிலில் தொடர்ந்து பால் கொடுக்கக் கூடாது. 4-5 பாட்டில்களை எப்போதும் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும். பால் கொடுப்பதற்கு முன்னால், ஃபீடிங் பாட்டில் மற்றும் நிப்பிளை நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரில் சுத்தப்படுத்த வேண்டும்.

நிப்பிளின் நிறம் மாறும்போதும், பால் வெளியேறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட துளை பெரிதாகும்போதும் அதை உடனடியாக மாற்ற வேண்டும். நிப்பிளை 15 நாட்களுக்கு ஒருதடவை மாற்றுவது மிக நல்லது.சுத்தப்படுத்தப்பட்ட ஃபீடிங் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

அதேவேளையில், வெளியே செல்லும்போது ஃபீடிங் பாட்டிலை குழந்தையின் துணிகள் அல்லது கொண்டுபோகும் பொருட்களோடு வைக்கின்றனர். இதனால் கிருமிகள் குழந்தையின் வயிற்றுக்குள் செல்லலாம். சில நேரங்களில் நிப்பிளை குழந்தைகள் விழுங்க நேரிடலாம். எனவே, ஃபீடிங் பாட்டிலை தவிர்ப்பதே நல்லது.ஃபீடிங் பாட்டிலில் பால் புகட்டும்போது, அதை குழந்தையிடம் கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் யாராவது அருகில் இருந்து அதைப் பிடித்து கொள்ள வேண்டும்.

குழந்தையின் எடைக்கு ஏற்றவாறு பால் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு 5 கிலோ எடை இருந்தால் 150 மில்லி கிராம் அளவு பால் புகட்டலாம். கடிகாரத்தைப் பார்த்து பால் தராமல் குழந்தை அழும்போதெல்லாம் பால் தரவேண்டும். பால் மற்றும் தண்ணீரை ஃபீடிங் பாட்டில் மூலம் கொடுக்கும்போது, ஒருசிலர் அவை வெளியே கொட்டிவிடக்கூடாது என்பதற்காக அதன் மூடியை காற்று உள்ளே போகாதவாறு இறுக மூடிவிடுவார்கள்.

அவ்வாறு செய்யாமல், காற்று பாட்டில் உள்ளே செல்லும் வகையில் மூடி வைக்க வேண்டும். இதனால் காற்று உள்ளே செல்வதால், வாய்க்குள் பால் எளிதாக செல்லும். காற்று உள்ளே செல்லாத நிலையில், குழந்தை வாந்தி எடுக்கும்.குழந்தையைப் படுக்க வைத்தவாறும் ஃபீடிங் பாட்டிலில் பால் புகட்டக் கூடாது. அந்த நேரத்தில் புரையேறலாம். அதனால் குழந்தைகளுக்கு நிமோனியா வரும். ஃபீடிங் பாட்டிலில் தொடர்ந்து பால் குடித்து வரும் குழந்தைகளுக்குப் பற்கள் மற்றும் உதடு அமைப்பு சீராக இல்லாமல் மாறலாம்.

பெரும்பாலானோர் மருந்து பாட்டிலை பால் கொடுக்க பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வது தவறு. இதனால் பலவிதமான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும். எனவே, ஃபீடிங் பாட்டில் உள்பட எந்த பாட்டிலையும் ஸ்ட்ரா பொருத்தப்பட்ட டம்ளர், மூக்குசொம்பு என்கிற கிண்டி என எதையும் பால் புகட்டவோ, தண்ணீர் கொடுக்கவோ உபயோகிப்பது நல்லது அல்ல. அதற்கு பதிலாக சங்கு பயன்படுத்தலாம்’’ என்கிறார் டாக்டர் விஸ்வநாத்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேபி ஃபேக்டரி!! (மருத்துவம்)
Next post ஆண்டவன் விட்ட வழி!! (மகளிர் பக்கம்)