சருமத்தை பளபளப்பாக்கும் கரும்பு!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 43 Second

பொங்கல் என்றால் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு. திண்ணையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் கரும்பில் பல மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.

* கரும்பின் சாறில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாகும்.

* கல்லீரல் நன்றாக செயல்படவும், செரிமானம் நன்றாக நடைபெறவும் கரும்பு பெரிதும் உதவுகிறது.

* கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக் கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

* கரும்பை உண்டால் உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்துள்ளதால், வேலை ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும்.

* கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு மற்றும் பற்களை வலிமையாக்கும்.

* பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.

* ஆன்டி ஆக்ஸிடண்டீஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ், புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான ேதாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

* கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க உதவும்.

* கரும்பை கடித்து சாப்பிடும் பொழுது பற்கள் மற்றும் வாய் பகுதியில் உள்ள கிருமிகளை அழித்து பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

* கரும்பில் உள்ள இயற்கையான வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் பண்பு கொண்டது.

* உடலில் உள்ள அதிக அளவு பித்தத்தை சீராக்கி சமநிலைப்படுத்துகிறது.

* உடல் சூட்டைக் குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை சீராக்குகிறது.

* உடலில் உள்ள நச்சுக்களையும், மாசுகளையும் நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

* கரும்பு சாற்றில் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நோய் குறையும்.

* தேங்காய்ப்பாலுடன் கரும்புச் சாறு சேர்த்துப் பருக சீதபேதி குறையும்.

* கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏழைகளின் ஊட்டச்சத்து சுரங்கம் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)
Next post கரகாட்டக் கலையின் கதாநாயகி வாஞ்சூர் கஸ்தூரி!! (மகளிர் பக்கம்)