இண்டர்வெல் டிரெயினிங்…!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 28 Second

காலத்துக்கேற்ற நவீன உடற்பயிற்சி கால மாற்றத்துக்கேற்ப உடற்பயிற்சியில் பல்வேறு புதிய முறைகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் இண்டர்வெல் டிரெயினிங் என்பது சமீபகாலமாக ஃபிட்னஸ் உலகில் அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கிறது. Interval training என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. பல வருடங்களாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறைதான் இது.

அதாவது கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம்.உதாரணத்திற்கு ட்ரெட் மில்லில் குறைந்த 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவதுதான் அடிப்படை.

குறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி இந்த முறையில் செய்ய வேண்டும். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது பிரபலங்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது. நேரம் இல்லாதபோது, விரைவாக உடற்பயிற்சியை முடிக்க நினைத்தால், ஜிம்மில் முழு அமர்வையும் 15-20 நிமிடங்கள் இண்டர்வெல் ட்ரெயினிங் முறையில் செய்தாலே போதுமானது. குறைவான நேரத்தில் நிறைய கலோரிகளை அதிக கொழுப்பை எரிக்க முடிவதோடு, பயிற்சி முடிந்த பின்னும் நிறைய கலோரிகளை இழக்க முடியும்.

சைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக்கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இண்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்துகிறோம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி. இண்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்துகிறது. இதை ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் செய்ய முடியாது. உடற்பயிற்சிகளில் நல்ல பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆசாரப் பாட்டி கற்றுக் கொடுத்த ஆரோக்கியம்! (மருத்துவம்)
Next post வியக்க வைக்கும் முன்னோர் உணவுப்பழக்கம்!(மருத்துவம்)