ஆப்பில் ஷாப் செய்யுங்க பண்டிகையை கொண்டாடுங்க!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 2 Second

பண்டிகை காலம் துவங்கியாச்சு. இனிமேல் எல்லா ஜவுளி கடைகளிலும் கூட்டம் அலை ேமாத ஆரம்பித்துவிடும். நவராத்திரியை தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், தமிழ் புத்தாண்டு வரை மக்கள் ஜவுளி கடைகளுக்கு  நடையாக நடந்து செல்ல ஆரம்பிச்சிடுவாங்க. மக்களின் தேவையை அறிந்து கடைகளிலும் புதிய ஃபேஷன்களில் பல வண்ண ஆடைகளை அறிமுகம் செய்வது எல்லாருடைய வழக்கம். புடவையை வாங்க கடைக்கு தான் போகணுமா? அதுவும் இந்தக் கூட்ட நெரிசலில்.

புடவையோ அல்லது எந்த உடையோ நிதானமாக பொறுமையாகத்தான் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நெரிசலுக்கு பயந்தே ஆன்லைனை நாட ஆரம்பித்துள்ளனர். அதுவும் குறிப்பா இன்றைய தலைமுறையினர். ஒரு பட்டனை தட்டி தங்களுக்கு பிடித்த உடைகளை இனி ஆன்லைனில் ஆப் மூலம் தேர்வு ெசய்யலாம்.

நியு சாரீஸ் ஆன்லைன் ஷாப்பிங்

உலகின் மிகத் தரமான புடவைகள் அனைத்தும் உள்ள தளம் தான் நியு சாரீஸ் ஆன்லைன் ஷாப்பிங். எல்லா வகையான புடவைகள் தரமானதாகவும் குறைந்த விலையிலும் இந்த ஆப்பில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் உங்களுக்கு பிடித்த புடவையை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்தால் போதும். உங்களின் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும். மேலும் பணத்தை நீங்கள் ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்ைல.

பொருளைப் பெற்றுக் கொண்டும் நேரடியாக பணத்தை கொடுக்கலாம். ஒரு வேலை நீங்கள் வாங்கிய புடவை பிடிக்கவில்லை என்றால் அதை திருப்பிக் கொடுத்து வேறு புடவையினையும் பெற்றுக் கொள்ளும் வசதிஉள்ளது. 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கி வருவதால் வாடிக்கையாளர்கள் தங்களின் பிரச்னைகள் குறித்த தீர்வினை எப்போது வேண்டும் என்றாலும் பெறலாம்.

இந்த ஆப்பில் காட்டன் புடவைகள், கல்யாண புடவைகள், பிரின்ட்டெட் புடவைகள், கேரளா புடவைகள்… என பல ரக புடவைகளும் உள்ளன. டீன் ஏஜ் பெண்களுக்கான பாவாடை தாவணி மற்றும் லெஹங்கா உடைகளும் இங்குள்ளன.

குர்திஸ் ஆன்லைன் ஷாப்பிங்

சல்வாருக்கு அடுத்து மிகவும் வசதியான மற்றும் நேர்த்தியான உடை என்றால் அது குர்த்திகள் தான். வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் இதனை விரும்பி அணிகிறார்கள். இதில் பல ரகம் உள்ளது. நீளமானவை, குட்டையானவை, பார்ட்டிகளிலும் அணிபவை என ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப நாம் குர்திகளை தேர்வு செய்து அணியலாம்.

குர்திகள் மட்டுமே இந்த ஆப்பில் இடம் பெற்றுள்ளன என்பதால் அதில் உங்களின் விருப்பம் மற்றும் தரத்திற்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம். காட்டன் குர்திகள் மட்டும் இல்லாமல், ஷிபான், ஜார்ஜெட், கிக்கன்காரி, எம்பிராய்டரி, பாகிஸ்தானி, அனார்கலி… போன்ற குர்திகளும் இந்த ஆப்பில் உள்ளன. உலகத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் விரும்பும் குர்தியினை தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணம் செலுத்துவதும் எளிது.

ெலஹங்கா சோளி 2019

நம் பாரம்பரிய பட்டுப்பாவாடையின் மார்டன் வெர்ஷன் தான் லெஹங்கா சோளி. லெஹங்கா சோளி 2019 ஆப்பில் 1000க்கும் மேற்பட்ட லெஹங்கா டிசைன்கள் உள்ளன. இதில் கல்யாணத்திற்கு, பார்ட்டிகளுக்கு மற்றும் சாதாரணமான விசேஷங்களுக்காக அணியக்கூடிய பல வகை டிசைன்கள் உள்ளன. ஒவ்வொரு லெஹங்காவின் புகைப்படங்களும் தரமான க்வாலிட்டியில் அப்லோட் செய்யப்பட்டு இருப்பதால், மிகைப்படுத்தி அதன் டிசைன்களின் நுணுக்கங்களை பார்த்து தெரிந்து ெகாள்ளலாம். ஷிபான், டை அண்ட் டை, ஜர்தோசி, பிளாக் பிரின்ட், ஜரி வேலைப்பாடு, மணி வேலைப்பாடு, கை வேலைப்பாடு என பல டிசைன்கள் உள்ளன.

ஆன்லைன் ஷாப்பிங் ஆப் பார் வுமன்

பெண்களுக்கான உடைகளை புடவைகளில் மட்டுமே அடக்கிவிட முடியாது. குர்தா, பாரம்பரிய உடைகள், சல்வார், கவுன்ஸ் என பல ரகம் உண்டு. ஒவ்வொரு உடைகளும் ஒவ்வொரு மாநிலத்தில் பிரபலம். இந்திய நாட்டின் பன்முக கலாச்சாரத்தை அவர்கள் அணியும் உடைகளை கொண்டு தெரிந்து
கொள்ள முடியும். இவை ஒவ்வொன்றும் மாறுபட்டது. அவை அனைத்தையும் ஒரே தளத்தில் இந்த ஆப் மூலம் பெறலாம்.

டிசைனர் புடவைகள், எம்பிராய்டரி புடவைகள், டிசைனர் குர்தி, லெஹங்கா, எதனிக் கவுன்கள் என பல மாநில உடைகளும் உள்ளன. இவற்றில் சில சல்வார் உடைகள் தைக்கப்படாமல் துணியாகவும் உள்ளன. காரணம் ஆன்லைனில் வாங்கும் போது நாம் உடைகளை அணிந்து பார்த்து வாங்க முடியாது. அதே சமயம் நம்முடைய அளவையும் நாம் சரியாக குறிப்பிட வேண்டும்.

இந்தப் பிரச்னையே வேண்டாம் என்று நினைப்பவர்கள் தைக்கப்படாத உடைகளாகவும் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து விலைகளிலும் உடைகள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்ப விலை, நிறம் மற்றும் உடைகளை தேர்வு செய்து பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதே போல் கட்டணம் செலுத்துவதும் எளிது. ஆன்லைன் முறையிலோ, நேரடியாகவோ அல்லது UPI அல்லது PhonePe முறையிலும் பணம் ெசலுத்தும் வசதியுள்ளது.

பிளவுஸ் டிசைன் 2019

புடவையின் டிசைனுக்கு ஏற்ப இரண்டு மடங்காக பிரமாண்டமாக பிளவுசினை டிசைன் செய்வது தான் இப்போதைய ஃபேஷன். 1000 ரூபாய் புடவையாக இருந்தாலும், அதற்கான பிளவுஸ்களில் டிசைன்களுக்குத்தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர். மணி வேலைப்பாடு, பேட்ச் வர்க், எம்பிராய்டரி என ஒவ்ெவாரு புடவைக்கு ஏற்ப டிசைன் செய்வது தான் இன்றைய ஃபேஷன். இது போன்ற அனைத்து டிசைன் பிளவுஸ்களும் இங்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன்களை பார்த்து உங்களின் புடவைக்கான பிளவுஸ்களை வடிவமைத்துக் கொள்ளலாம்.

டிசைனர் சல்வார் சூட்ஸ்

உலகளவில் நிலவும் சல்வார் டிசைன்கள் கொண்ட ஆப் தான் டிசைனர் சல்வார் சூட்ஸ். ஒவ்வொன்றும் திறமையான டிசைனர்களால் வடிவமைக்கப்
பட்டுள்ளது. பார்ட்டி, அலுவலகம் செல்ல, விழாக்காலம் என் ஒவ்வொரு விசேஷங்களுக்கு ஏற்ப சல்வார்கள் இங்குள்ளன. விரும்பும் உடைகளை அவரவர் அளவிற்கு ஏற்பவும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு உடையினை மிகைப்படுத்தி பார்க்க முடியும் என்பதால் அதில் உள்ள டிசைன்களின் தரத்தை கண்டறிந்து உடைகளை பெறுவது எளிது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கியம் பேணும் சிறுதானியம்! (மருத்துவம்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)