தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 19 Second

எத்தனை காலங்கள், எத்தனை யுகங்கள், ஆயிரம் ஆயிரம் ஃபேஷன் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த காஞ்சிப்பட்டுக்கு மட்டும் மவுசு இறங்கவே இறங்காது. அதிலும் கைத்தறியில் நெய்யப்பட்ட சேலைகளுக்கு எப்போதும் அந்தஸ்து அதிகம்தான்.

அதனாலேயே தறிகளால் நெய்யப்பட்ட பட்டுப் புடவைகள் எப்போதும் விலை அதிகமாக இருக்கும். அதற்கேற்ப அதன் மதிப்பும் இருக்கும். அப்படியான சில எக்ஸ்குளூசிவ் புடவைகளை ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறார்கள் சுந்தரி சில்க்ஸ். அவற்றில் சில பளிச் புடவைகளின் விபரங்கள் இங்கே.

பெரிய பார்டர் புடவை

அக்காலம் முதல் இக்காலம் வரை நம் வீட்டு பாட்டி, அம்மா, அத்தை, சித்தி இவர்களின் கனவுப் பட்டுகள். சுத்தமான பட்டு அதில் பட்டுப்புடவைக்கே உரிய மெரூன் நிற பூ டிசைன் போடப்பட்ட பெரிய பார்டர் வகை காஞ்சிப்பட்டு.
புராடெக்ட் கோட்: CCC61863
விலை:  ரூ.42,615

கலர்ஃபுல் பார்டர்

பளிச் நிறத்தில் பார்டர், அடர் நிறத்தில் புடவை இந்தக் காம்போ புடவைகள் இல்லாத பெண்களே இருக்க முடியாது. வீட்டு விசேஷங்கள், திருமணம், உறவினர்களின் விசேஷங்கள் எனில் பளிச் பார்டர் எப்போதும் சிறப்பான லுக் கொடுக்கும். அடர் நீல நிற புடவை அதில் பின்க் நிற பார்டரும் தங்க நிற பார்டரும் இணைந்து வருகிறது.
புராடெக்ட் கோட்: AA178218
விலை: ரூ.45,215

கல்யாண பட்டு

கல்யாணம் என்றாலே மணப்பெண் பிரகாசமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப நிறமும் டிசைன்களும் மின்ன வேண்டும். ஆரஞ்சு நிற புடவையில் வெறும் பட்டின் தங்க நிறத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த டிரெடிஷனல் பட்டுப் புடவை. சின்னக் கட்டங்களாக டிசைன், முந்தியில் தங்க நிற யானைகள்.
புராடெக்ட் கோட்: AA179244
விலை: ரூ.45,771

செக்ட் ஸ்பெஷல்

‘விஸ்வாசம்‘ படம் ஹிட் ஆனாலும் ஆனது பெண்களின் சாய்ஸ் இந்த காரைக்குடி ஸ்டைல் கட்டம் டிசைன்கள்தான். காட்டன், லினென் என அனைத்திலும் கட்டங்கள்தான் இப்போது டிரெண்ட். பட்டு மட்டும் விட்டு விடுவோமா? பழமைக்கு எப்போதும் தனி மரியாதைதான். ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறக் கட்டங்கள், கரும் ஊதா நிற பார்டர் சகிதமாக ருத்ரச்சா மோடிஃப் வகை புடவை.
புராடெக்ட் கோட்: CCC61104
விலை: ரூ. 32,427

வெண்பட்டு

பாட்டில் பச்சை நிற பார்டருடன் வெண்பட்டு கலந்த காஞ்சிப்பட்டு. இதில் பார்டர் பாட்டில் பச்சையில் பார்டருக்குள் மூன்று  பார்டர்களாக கத்தரிப்பூ மற்றும் நீல நிற பார்டர்கள் சகிதமாக நெய்யப்பட்ட புடவை. முக்கியமான நிகழ்ச்சிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆண்டு விழாக்கள், அலுவலக சந்திப்புகள் மற்றும் அலுவலக பார்ட்டிகளில் கட்டினாலும் கெத்தான தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள் இது.
புராடெக்ட் கோட்: AA177287
விலை: ரூ. 37,714

மயில் கழுத்து

நீல நிற பட்டு

பட்டு என்றாலே மெரூன் நிறத்தை அடுத்து அதிகம் விரும்பப்படும் பட்டு நிறம் மயில் கழுத்து ஊதாதான். பூக்களால் நிறைந்த அரச இலை டிசைன். மேலும் அதைச்சுற்றிலும் கட்டம் என வெள்ளி நிற பட்டு நூலால் நெய்யப்பட்ட பாரம்பரிய புடவை. மேலும் பின்க் நிற பார்டர் சகிதமாக பாந்தமான லுக் கொடுக்கும் பட்டுப் புடவை.
புராடெக்ட் கோட் : CCC61859
விலை: ரூ. 41,315

சிம்பிள் பட்டு
சின்ன நிகழ்ச்சி, காது குத்து, பக்கத்து வீட்டுப் பெண் கல்யாணம், நண்பர்கள் ரிசெப்ஷன் அதே சமயம் வயதும் குறைவு எனில் இந்த சின்ன பார்டர் சிம்பிள் பட்டு உடுத்தலாம். முழுக்க ஒரே பின்க் நிறம் என்பதால் பிளவுஸ் உங்கள் சாய்ஸ்தான். கிராண்டாக எந்த கலருடனும் மேட்ச் செய்துகொள்ளலாம்.
புராடெக்ட் கோட் : CCC61856
விலை: ரூ. 29,615

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆப்பில் ஷாப் செய்யுங்க பண்டிகையை கொண்டாடுங்க!(மகளிர் பக்கம்)
Next post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)