ஆடி ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 31 Second

ஜுவல் ஒன்

ஜுவல் ஒன் என்றாலே பாரம்பரியமும், புதுமையும் கொண்ட நகைகள், தூய்மையான தங்கம், எக்ஸ்க்ளூசிவ் டிசைன்கள். தமிழ்நாடு,  புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் போன்ற 15 இடங்களில் இருக்கிறது. தேசிய மற்றும் உலகளவிலான பரிசுகளை வென்றிருக்கும் ஜுவல் ஒன்  தனிப்பட்ட டிசைன்களுக்கு பெயர் போனது.கடந்த சில ஆண்டுகளாக இதன் தனிப்பட்ட டிசைன்களுக்கும் கஸ்டமர் சேவைக்கும் பெயர்  பெற்றது  ஜுவல்  ஒன். இளம் தலைமுறைக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ள நகைகள். தனிப்பட்ட ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப  பொருந்தும் வகையில் பலவிதமான ரகங்கள் உள்ளன.வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்பட்ட டிசைன்களை ஜுவல் ஒன் டிசைனர்களிடம்  பேசி அதன்படி செய்து கொள்ளலாம். சிறப்பு தினங்களில் சிறப்பு சலுகைகளும் உண்டு.

ஆடியின் புதிய வரவுகள்

பாரம்பரிய டிசைன்களான எமரால்டு பொருத்தப்பட்ட நகைகள். இந்த நகைகள் நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை பேசும்.  அனுயா செட் – மாங்காய் மற்றும் பூக்கள் நிறைந்த டிசைன் கான்செப்ட் பேட்டர்ன் க்ளாஸிக் டிசைன்ஸ் கம்பீரமான ஓர் அழகை கொடுக்கும்.  வண்ணக்கற்களினாலான அதன் வரிசை அதன் செழுமையைக் காட்டுகிறது. இது மணமகள் அலங்காரம், பண்டிகை நேரங்கள் மற்றும்  விழாக்காலங்களில் அணிய மிகப் பொருத்தமாக இருக்கும்.இந்திய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அற்புதமான படைப்பாற்றல்  அழகுடன் படைக்கப்பட்டுள்ளது. சிறப்பான கைவினையில் எமரால்டு நகைகள் ஜொலிக்கின்றன. பிரத்யேகமாக இந்த நகைகள்  வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பண்டிகை மற்றும் விழாக்கால உடைகளுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். கல்யாணங்களுக்கு  மிகப்பொருத்தமாக இருக்கும் லக்ஷனா எமரால்டு செட்.

அரோமா நெய்

ஆரோக்கியம் கருதி சுத்தமானபசும்பாலில் இருந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது அரோமா நெய். அரோமா நெய்யின் சுவையும்,  மனமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ருசிக்க வைக்கும். நெய்யில் உள்ள வைட்டமின் A உடலில் தேவையற்ற  மூலக்கூறுகளை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மேலும் குடற்புண்கள் வராமலும் தடுக்கிறது. ஆரோக்கியமான  வாழ்வுக்கு ஆனந்தமான அனுபவம் தரும் அரோமா நெய் அன்றாட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

கீர்த்திலாலின் ‘க்ளோ அண்ட் கோ’ வைர நகைத்தொகுப்பு

மிகப் பழமையான வைர நகை விற்பனை நிறுவனங்களுள் ஒன்றான கீர்த்திலால் ஜுவல்லரின் ஒவ்வொரு நெக்லஸ் நகையும் கழுத்தணி  வடிவமைப்பிற்காக விருதினை வென்ற வடிவமைப்பாளர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போதைய இளம்  தலைமுறையினரின் எண்ணங்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன், பாரம்பரியமும் கலந்த கலவையாகவே நெக்லஸ் தயாராகிறது. கீர்த்திலாலின்  வைர கழுத்தணிகள் நம்ப முடியாத விலையில் வாடிக்கையாளர்களை மனதில் நிறுத்தி மிகவும் மலிவான விலையில் 70000ல் இருந்தே  விற்பனைக்கு கிடைக்கிறது. தங்க நெக்லஸைவிட குறைவான விலையில் ஒரு வைர நெக்லஸை கீர்த்திலால் ஜுவல்லரியில் வாங்க  முடியும்.

‘க்ளோ அண்ட் கோ’ என்ற பெயரில் ஜொலிக்கும் புதிய வைர நகைகளின் அற்புதத் தொகுப்பையும்  பொது மக்களின் பார்வைக்கு  கீர்த்திலால் ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. சுறுசுறுப்பும், சாதிக்கும் துடிப்பும், உத்வேகமும் கொண்ட தன் ஆளுமையை  வெளிப்படுத்த விரும்பும் இன்றைய நவீன இளம் பெண்களின் தேவையை மனதில் இறுத்தி, அவர்களை ஈர்ப்பதையே பெரும் இலக்காகக்  கொண்டு ‘க்ளோ அண்ட் கோ’ தொகுப்பு வைர நகைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிற நகைத்  தொகுப்பிலிருந்து இது பெரிதும் மாறுபட்ட வடிவமைப்பில் தனித்துவத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. பார்ட்டி மற்றும் விருந்துகளுக்கு  மட்டுமல்லாமல், பணிகளுக்குச் செல்லும் நேரத்திலும், கேஷுவலாக அணிவதற்கு ஏற்ற வகையிலும் ஏற்றதாகவே இத்தொகுப்பு முற்றிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு.

ஃபேர்பீட்

உலகின் சிறந்த இயற்கை மூலப் பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ஸ்கின் கேர் ஆயில் மற்றும் ஹேர் கேர் ஆயில்  தயாரிக்கும் நிறுவனங்களில் சிறந்து விளங்குகிறது ஃபேர்பீட் நிறுவனம். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கிணங்க தற்போது ஆயுர்வேத  முறையில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இனி ஜோபா இயற்கை ஆயுர்வேத ஃபேஷியலை வாங்கி  பயன் பெறலாம். வாடிக்கையாளர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் இயற்கை முறையில் மேம்படுத்த முழுமுயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. ஃபேஷியல், ஹேர் கேர் ஆயில் பெற சிறந்த சாய்ஸ் ஜோபா இயற்கை ஆயுர்வேதம்தான்.

கோதாஸ் காபி

காலை உணவு கூட இல்லாமல் இருந்துவிடமுடியும். உலகின் பெரும்பான்மையானோர் காபி குடிக்காமல் இருக்க மாட்டார்கள்.  கிறங்கடிக்கும் சுவை. சுண்டியிழுக்கும் நறுமணம். பருகிய முதன் முறையிலேயே இதன் சுவைக்கு ஈடு இணையான ஃபில்டர் காபி  இல்லவே இல்லை என்பதை உணர்வீர்கள். கோதாஸ் காபியின் ஒன்வே வால்வ் அதன் நறுமணத்தையும் சுவையையும் பாதுகாக்க  உதவுகிறது. ஸ்பெஷாலிட்டி பிளன்டில் 85 சதவிகிதம் காபி, 15 சதவிகிதம் சிக்ரி. நோவா தேர்ம்மில் 100 சதவிகிதம் ப்யூர் காபித்தூள்  கிடைக்கும். ஃப்ரஷ்ஷான தரமான கோத்தாஸ் பில்டர் காபி பவுடர் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். 1949 முதல்  தென்னிந்தியாவின் ஃபேவரைட் ஃபில்டர் காபி. அருமையான ஃபில்டர் காபி பருக, ஃப்ரஷ் காபி பவுடர் வாங்க பிரத்யேக கிளைகளை  அணுகவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வானவில் சந்தை!! (மகளிர் பக்கம்)
Next post ஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’!! (மகளிர் பக்கம்)