வந்தாச்சு இன்சுலின் மாத்திரை!(மருத்துவம்)

Read Time:2 Minute, 41 Second

நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில் ஆறுதலளிக்கும் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி பிரச்னைக்குத் தீர்வாக இன்சுலின் மாத்திரை தயாரிக்கும் முயற்சி தற்போது வெற்றியடைந்திருக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக இன்சுலின் ஊசிகளை போட்டுக் கொள்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், முதியவர்கள் பலருக்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதில் சில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டு. பிறருடைய உதவி இல்லாமல் ஊசி போட்டுக்கொள்ள முடியாமலும் தவிப்பார்கள். அதுவும் இல்லாமல் இன்சுலின் ஊசியை 8 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்.

இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வாகவே வந்திருக்கிறது இன்சுலின் மாத்திரை. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் ஒன்றுதான் இன்சுலின் மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தினர் Oral insulin என்ற பெயரில் வாய் வழியே உட்கொள்ளும் இன்சுலின் மாத்திரைகளை தயாரித்து மனிதர்களிடமும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.

பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதால் விரைவில் இன்சுலின் மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். நீரிழிவு நோய் சிகிச்சையில் இது ஒரு மைல்கல் என்பதால் மருத்துவத் துறையிலும், நீரிழிவு நோயாளிகளிடமும் இன்சுலின் மாத்திரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?(அவ்வப்போது கிளாமர்)
Next post சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்!! (மருத்துவம்)