ஃபேஷன் A – Z !!(மகளிர் பக்கம்)

Read Time:17 Minute, 18 Second

ஆண்களின் கால்சட்டைகள் என்று வரும் போது அதில் ஒரு சில ஸ்டைல்கள் மட்டுமே என்று குறிப்பிட்டு சொல்ல முடியும். அவர்கள் அணியும் பொதுவான கால்சட்டைகள் என்று பார்த்தால் அது காட்டன் பேன்ட், ஜீன்ஸ் என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் இந்த உடைகள் அணிவது பெரிய தவறு அல்ல. இவை ஆண்களின் கப்போடர்களை அழகுப்படுத்துமா என்பது தான் இன்றைய கேள்வி.

ஆண்களின் கால்சட்டைகள் அவர்களின் மிகவும் முக்கியமான உடை. காரணம் அது தான் அவர்கள் மற்ற உடைகளுக்கான அடித்தளம் அல்லது நங்கூரம் என்று சொல்லலாம். கால்சட்டைகள் ஆண்கள் அணியும் சட்டை, டீஷர்ட் அல்லது வேறு எந்த உடைகளுக்கும் அழகு சேர்க்கும் ஒரு முக்கியமான உடை. காரணம் இது உங்க உடலின் பெரிய பகுதியை அழகுப்படுத்தக்கூடியது. மேலும் ஒரு ஆணை உயரமாகவும் அல்லது குள்ளமாகவும் எடுத்துக்காட்ட கூடிய உடையும் இது தான் என்று குறிப்பிட்ட சொல்ல வேண்டும்.

இடுப்பு வரை உயரமுள்ள நீளமான கால்சட்டைகள் அணியும் போது உங்களை அது உயரமாக எடுத்துக்காட்டும். ஆனால் அதுவே பூட் டக்ஸ் (பூட்ஸ் காலணிகளுக்குள் பேன்ட்களை அணிவது), இடுப்புக்கு கீழ் அணிந்தாலும், மற்றும் கப்ஸ் கொண்ட பேன்ட் (பேன்டின் கால் பகுதியினை உள்பக்கமாக மடிக்காமல் வெளிப்பக்கமாக மடித்து இருப்பது) அணியும் போது உங்களை மேலும் குள்ளமாக எடுத்துக்காட்டும்.

உங்களின் உடல் அளவிற்கு ஏற்ப பேன்ட் அணியும் போது அது உங்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பது மட்டுமல்லாமல் சவுகரியமான தோற்றத்தையும் கொடுக்கும். மேலும் நேர்த்தியான உடைகள் அணிந்தால் அது உங்களுக்கு அழகான தோற்றத்தை தருவது மட்டுமல்லாமல், அதே தன்னம்பிக்கையோடு நீங்கள் விரும்பும் வேலையை கைப்பற்ற உதவுவது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். சாதாரண சினோஸ் முதல் டிரவுசர்கள் வரை பேன்ட்களில் பல விதமான ரகங்கள் உள்ளன. ஆண்கள் தேர்வு செய்வதற்காக.மேலும் உங்களின் உடையில் ஒரு புதிய தோற்றம் மற்றும் ஸ்டைல்களை கொடுக்க உங்களின் அலமாரியில் என்னென்ன ஸ்டைல் பேன்ட்கள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஸ்லிம் ஜீன்ஸ்

இந்த ஸ்டைல் பேன்ட்டின் முக்கிய அம்சமே இந்த கால்சட்டை எல்லா விதமான உடைகளுடன் அழகாக பொருந்தும். ஒரு அழகான ஸ்லிம் ஜீன்ஸ் அதற்கு மேட்சிங்கான ஷர்ட் மற்றும் காஷ்வல் ஷூக்கள் அணிந்தால், இரவு நேரம் நண்பர்களுடன் வெளியே செல்ல அருமையான காஸ்ட்யூம். கஃப் பேன்ட் அணிந்து அதற்கு சாக்ஸ் அணியாமல் ஸ்னிக்கர்ஸ் மற்றும் வெள்ளை நிற டி-ஷர்ட் காலை நேரம் காஷ்வலாக வெளியே செல்வதற்கான ஏற்ற உடை. ஸ்லிம் ஜீன்ஸ் உடைகள் யார் அணிந்தாலும் அழகான தோற்றத்தினை அளிக்கும்.மேலும் மிகவும் சவுகரியமான மற்றும் எல்லா நேரமும் அணிந்து செல்லக்கூடிய உடை.

சினோஸ்

இந்த வகை பேன்ட்கள் எல்லா விதமான நாட்களுக்கு ஏற்றது. திருமணம் மற்றும் பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் இந்த பேன்ட்டினை அணிந்து அதற்கு ஒரு மேட்சிங் ஷர்ட் அணிந்தால், பார்க்க கிராண்டாக மட்டுமில்லாமல் கேஷ்வல் தோற்றத்தையும் தரும். இந்த உடை மிகவும் மெல்லியதானது, ஜீன்ஸ் பேன்ட் போல் அதிக எடை இல்லாத உடை என்பதால், வெளியே செல்லும் போது அணிவதற்கான மிகவும் நல்ல தேர்வு. மேலும் இந்த துணி சுவாசிக்க கூடிய தன்மைக் கொண்டதால், வெயில் நேரத்திலும் காற்றோட்டத்தினை உணர முடியும்.

ஸ்ட்ரெயிட் லெக் ஜீன்ஸ்

ஸ்ட்ரெயிட் லெக் ஜீன்ஸ் மற்றுமொறு கிளாசிக் மற்றும் தற்போது மார்க்கெட்டில் டிரண்டில் இருக்கும் உடை. உடலை இறுக்கி பிடிக்காமல் தளர்வாக இருக்கக்கூடிய கால்சட்டை என்பதால் மேலும் அணியும் போது நேர்த்தியான அமைப்பைபினை கொடுக்கும் என்பதால், இதன் ஸ்ட்ரேட் கட் அமைப்பு, உங்களின் மார்பக பகுதியில் கால் மற்றும் காலணிகளுக்கு சரியான அமைப்பு மற்றம் சமநிலையினை ஏற்படுத்தும். மேலும் டிஷர்ட்  மட்டுமே அணியாமல் அதனுடன் ஜாக்கெட் சேர்த்து அந்த ஒரு லேயர் போன்ற அமைப்பினை கொடுக்து ஸ்னீக்கர் ஸ்டைலிஷ் ஷூக்களை அணிந்தால் இதன் தோற்றம் மேலும் அழகாக இருக்கும்.

ஸ்லிம் ஃபிட் டிரவுசர்ஸ்

உங்களின் ஸ்டைலான தோற்றத்தை எடுத்துக்காட்டவும், சவுகரியமாக உணரவும் ஏற்ற பேன்ட் ஸ்லிம் ஃபிட் டிரவுசர்கள். உங்களின் உடலின் அளவிற்கு ஏற்ப நேர்த்தியாக தைத்து பிளேசர்களுக்கு அணிந்தால் மிகவும் அழகாக இருக்கும். உங்களின் டிரவுசர்கள் அடர்த்தியான நிறத்தில் இருந்தால் அதற்கு மேட்சிங்காக மெல்லிய நிற பிளேசர்கள் மற்றும் டீஷர்ட்டுடன் அணியலாம்.

ஜாக்கர்ஸ்

கேஷ்வலான பேன்ட் என்றால் அது ஜாக்கர் பேன்ட்கள். ஜாக்கெட் மற்றும் பளிச் நிற ஷூக்கள் மற்றும் அதற்கேற்ப அணிகலன்களுடன் மேட்ச் செ ய்தால், உங்களுக்கு ஒரு போல்டான லுக்கினை கொடுக்கும். நியூட்டல் நிறங்கள் பீஜ், கிரே, கிரீம், பிரவுன், கருப்பு, வெள்ளை போன்ற நிறங்கள் இதற்கு ஒரு மார்டர்ன் தோற்றத்தை அளிக்கும். அதே சமயம் பிரட் நிறங்களும் சிலருக்கு எடுப்பான ேதாற்றத்தினை அளிக்கும். இந்த பேன்ட்கள் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடவோ அல்லது சாதாரணமாக தினசரி பயன்பாட்டிற்காகவும்  அணியலாம்.

கிராப்ட் டிரவுசர்ஸ்

கிராப்ட் டிரவுசர்கள் 80ம் நூற்றாண்டில் அணிந்த உடைகள் போல் தோற்றமளித்தாலும், இன்றைய மார்டர்ன் உலகிற்கு ஏற்ப அதனை நம் விருப்பம் போல் மாற்றி அமைக்கலாம். கணுக்கால் வரை மட்டுமே நீளமாக இருக்கும் இந்த பேன்ட் அணியும் போது, அது நீங்கள் காலில் அணிந்திருக்கும் சாக்சினை பளிச்சென்று எடுத்துக்காட்டும். இந்த பேன்ட் அணியும் போது, அதன் (ேபன்ட் காலின் இறுதியில் மடிக்கப்பட்ட பகுதி) கஃப் பகுதி சரியான நீளத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். இல்லை என்றால் டெய்லரிடம் கொடுத்து ஆல்ட்ரேட் செய்து கொள்வது அவசியம். மேலும் இதில் உங்களின் சாதாரண பேன்ட்களைக் கூட கிராப்ட் டிரவுசர்களாக மாற்றி அமைக்க முடியும். அதன் காலில் கஃப்பினை அமைத்து மடித்து தைத்தால் சாதாரண பேன்ட் கிராப்ட் டிரவுசராக மாறிடும்.

கார்கோ பேன்ட்ஸ்

கார்கோ பேன்ட்ஸ் என்றாலே லூசாக பேன்ட்களில் பெரிய பெரிய பாக்கெட்கள் கொண்டது தான் நினைவிற்கு வரும். அது பழைய ஸ்டைல். அந்த ஸ்டைலேயே தற்போது இன்றைய மார்டர்ன் ஆண்களுக்காக ஸ்லிம் ஃபிட்டிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

பிளீட்டெட் டிரவுசர்ஸ்

மிக சமீப காலம் வரை, 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் கால்சட்டைகள் மடிப்புகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த மடிப்புகள் காலப்போக்கில் ஆண்கள் விரும்பவில்லை என்பதால், மடிப்புகள் இல்லாமல் பேன்ட்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. ஆனால், ஆண்கள் தற்போது கொஞ்சம் லூசான பேன்ட்களை அணிய விரும்புவதால், மீண்டும் பிளீட்கள் அமைக்கப்பட்ட பேன்ட்கள் டிரண்டாகி வருகின்றன. ஸ்லிம் ஃபிட் பேன்ட்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, பிளீட் வைக்கப்பட்ட பேன்ட்கள் அணியும் போது, அது நமக்கு சுதந்திரமாக நடக்கவும், சவுகரியமாகவும் இருக்கும்.

பெண்களின் தோற்றத்தை மேம்படுத்த பல உடைகள் இருந்தாலும், ஆண்களின் தோற்றத்தினை எடுத்துக்காட்டும் ஒரே உடை அவர்கள் அணியும் பேன்ட் என்று குறிப்பிடலாம். ஒரு ஸ்டைல் பேன்ட்டிலிருந்து வேறு ஸ்டைல் மாறும் போது, அது உங்களுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தினை கொடுக்கும். அதனால் உங்களின் ஃபிட்டிற்கு ஏற்ற பேன்ட்டினை அணிவதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.

பேன்ட் பிரேக்ஸ்?

உங்களின் கால் நீளத்தை விட பேன்ட்டின் கால் நீளமாக இருந்தால் அதை சரி செய்ய அமைக்கப்படுவது தான் பேன்ட் பிரேக்ஸ். இது உங்களின் கால் ஷூவிற்கு மேல் இருக்குமாறு தைக்கப்பட்டு இருக்கும். உங்களின் பேன்ட்களில் பிரேக் இல்லை என்றால், பேன்ட்டின் கால் பகுதி மடங்காமல் பேன்ட்டின் கஃப் பகுதி ஷூவுடன் தழுவி இருக்கும்.

ஃபிட்டான டிரவுசர்கள்

சூட் அல்லது ஷர்ட்களுக்கு பேன்ட் அணியும் போது, ேபன்ட்டின் இடுப்பு பகுதி உங்களின் இடுப்பு எலும்பிற்கு மேல் இருக்க வேண்டும். அதாவது தொப்புளுக்கு கீழ். மேலும் பேன்ட்கள் ஃபிட்டாக இருப்பது பார்க்க அழகாக இருக்கும். அதே சமயம் உங்களின் பிட்டப்பகுதியினை அது இறுக்கி பிடிக்காமல் இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் மிகவும் இறுக்கமான அல்லது லூசான பேன்ட் அணிவதை தவிர்க்க முடியும். டிரவுசர்கள் இடுப்பு பகுதியில் ஃபிட்டாக பொருந்த வேண்டும், அதே சமயம் அசவுகரியமாகவும் இருக்கக்கூடாது. மேலும் பேன்ட் பிரோக்ஸ் அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சிலர் அதை விரும்பமாட்டார்கள். சிலர் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மற்றவர்கள் இரண்டுக்கும் இடைப்பட்டதை விரும்புவார்கள்.

ஃபிட் ஃபார் சினோஸ்

சினோஸ் பேன்ட்கள் சூட் பேன்ட் அல்லது டிரவுசர்களை விட ஸ்லிம் ஃபிட்டாக இருக்க வேண்டும். பலர் சினோஸ் பேன்ட்டினை இரண்டு இஞ்ச் இடுப்பிற்கு கீழ் அணிகிறார்கள். எதுவாக இருந்தாலும், தொழில் சார்ந்த வேலைக்காக செல்லும் போது சினோஸ் பேன்ட்டினை அணிந்தால் அதை மற்ற பேன்ட்கள் போல் ஃபிட்டாக அணிய வேண்டும். இதை காஷ்வல் உடையாக அணிந்தால் அது பார்க்க ஸ்லிம் ஃபிட்டாக இருக்க வேண்டும். சினோஸ் பேன்ட்டிற்கு மீடியம் பிரேக் கொடுக்கலாமே தவிர அதிக அளவு பிரேக் கொடுத்தால் மிகவும் லூசாக இருப்பது போன்ற உணர்வினை தோற்றுவிக்கும்.

ஃபிட் ஃபார் ஜீன்ஸ்

கேஷ்வல் பேன்ட்டினை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஜீன்சில் பல வித ஸ்டைல்கள் உள்ளன. இதனை சினோஸ் பேன்டைவிட ஒரு இஞ்ச் அல்லது மேலும் சில இஞ்ச்கள் இடுப்பிற்கு கீழ் அணியலாம். அல்லது இடுப்பில் ஃபிட்டாகும் படியும் அணியலாம். இப்போது டேன்ஜரஸ்லி லோ என்று மூன்று முதல் நான்கு இஞ்ச் தொப்புளுக்கு கீழ் அணிவது ஃபேஷனாகியுள்ளது. ஜீன்ஸ் பொறுத்தவரை ஃபிட்டாக அணிவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதில் ஸ்ட்ரெட்க் ஸ்டைலில் வரும் ஜீன்ஸ்கள் பெரும்பாலும் அனைத்து உடல் வாகுள்ளவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இருப்பினும் ஜீன்ஸ் பேன்ட் கால் பகுதி முழுவதும் சீராக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது தொடையில் இறுக்கமாகவும் முழங்காலுக்குக் கீழே தளர்வாகவும் இருக்கும் ஜீன்ஸ் பேன்ட்டினை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் பேன்ட்டில் பாதியளவு பிரேக் கொண்டு டிசைன் செய்யலாம். காரணம் பெரும்பாலானவர்கள் ஜீன்ஸ் பேன்ட்டின் கால்சட்டையினை மடித்து விடுவதற்கு சவுகரியமாக இருக்கும்.

அனைவரும் ஷாப்பிங் செய்யும் போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ேபன்ட்கள் நீளமாக இருக்கிறது என்று வருத்தப்படவேண்டாம். பேன்ட் உங்களின் இடுப்பு பகுதியில் சரியாக பொருந்துகிறதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் அனைத்து பேன்ட் தயாரிப்பாளர்களும் பேன்ட் கால் பகுதியில் அதிக அளவு துணிகளை எக்ஸ்ட்ராவாக விடுவதில்லை. அப்படி நீளமாக இருந்தால் அதை மடித்து உங்களின் காலின் நிளத்திற்கு ஏற்ப தைத்துக் கொள்ளலாம்.

அதனால் பேன்ட் வாங்கும் போது இடுப்பு பகுதி, உங்களின் பின் பகுதி மற்றும் கால் முழுதும் ஃபிட்டாக இருக்கிறதா என்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். கால்சட்டைகள் எந்த ஸ்டைல்களாக இருந்தாலும், காலின் முழு பகுதியில் அவை நன்கு பொருந்த வேண்டும். தொடை பகுதியில் தளர்வாக இருக்கக்கூடாது என்பதை எப்போது ஷாப்பிங் செய்யும் போது கவனத்தில் கொள்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டிஸ்லெக்சியா பாதிப்பு… யூடியூப் ஸ்டார்…ஆறு இலக்குகளில் வருமானம்…!!(மகளிர் பக்கம்)
Next post ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)