இயர் போன் அலெர்ட்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 6 Second

இன்றைய டெக் யுகத்தில் ஹெட்போன், இயர்போன், இயர் பட்ஸ்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவம் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.

*தற்போது இருபத்திரண்டு சதவீத குழந்தைகளுக்கும், பதினேழு சதவீத பெரியவர்களுக்கும் கேட்டல் திறனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

*இந்த சாதனங்கள் அதிகபட்சமாக 105 டெசிபல் முதல் 110 டெசிபல் வரையிலான ஒலியை டியூன் செய்கின்றன. 85 டெசிபலுக்கு அதிகமான ஒலியை நாம் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்கும்போது காதுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

*அதே சமயம் 105 டெசிபல் முதல் 110 டெசிபல் வரையிலான ஒலியை ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாகக் கேட்டாலே பாதிப்புதான்.

*நமது செவிக்கு 60 டெசிபல் முதல் 85 டெசிபல் வரையிலான ஒலியே பாதுகாப்பானது. அதிகபட்ச ஒலியை கேட்கும்போது அது குறைந்தபட்சம் 1 மணி நேரத்திலேயே நமது காதுகளை பாதிக்கும்.

*கூகுல்மீட் மற்றும் ஜும் மீட் போன்ற செயலிகளை ஒரு மணி நேரம் அல்லது அதையும் தாண்டிப் பயன்படுத்தும்போது ஒலியின் அளவை குறைத்து வைத்துக்கொள்வது நல்லது.

*தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஹெட்போன்களைப் பயன்படுத்துவது நல்லது.

*ரிலாக்ஸாகப் பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்றவற்றுக்கு சாதாரண ஸ்பீக்கர்களை அளவான ஒலியில் வைத்துக்கேட்பதுவே நல்லது.

*நல்ல தரமான ஹெட்போன்கள், இயர்போன்களையே வாங்குவது பாதுகாப்பு. தரமற்ற ஹெட்போன்கள் காதுகளையும் பாதிக்கும். விரைவில் செயல் இழந்தும்போகும்.

*அதிக இரைச்சலான ஓசைகளிலிருந்து காதுகளைப் பாதுகாத்திடுங்கள். அதுவே கேட்கும் திறன் நீடித்திருக்க ஒரே சிறந்த வழி.

*காது வலி, கேட்பதில் பிரச்னை, குழப்பான ஒலிகள் அல்லது காதுகள் அடைத்தல், தலைச்சுற்றல் அல்லது பலவீனமான சமநிலை போன்றவை காது
களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகும்.

*இந்த அறிகுறிகள் தென்பட்டால் மேலும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுகுவலிக்கு அஞ்சேல்!(மருத்துவம்)
Next post சோடாமாவு சேர்க்காத ஆப்பம் முடக்கத்தான் காரப் பணியாரம் வாழைப்பூ வடை,செம்பருத்தி பால்!(மகளிர் பக்கம்)