சமையலும் பாத்திரமும்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 7 Second

நான்ஸ்டிக் தவா, டப்பர்வேர் பாத்திரங்கள், மைக்ரோவேவ் பாத்திரங்கள் … என பல விதமான பாத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் உள்ளன. பார்க்க அழகாகவும் நேரத்தியாக இருக்கும் இந்த பாத்திரங்களில் சமைப்பதால் நாமே பல விதமான நோய்களை நம் வீட்டின் சமையல் அறையில் இருந்து உற்பத்தி செய்கிறோம். நம் முன்னோர்கள் இயற்கை அளித்த பாத்திரத்தை கொண்டுதான் சமையல் செய்து வந்தார்கள். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். நம் பழங்கால பாத்திரம் மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்ளலாம்…

*மண்பாண்ட சமையல் – ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையை கூட்டக் கூடியது. நீண்டநேரத்துக்குக் கெடாமலும், சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

*மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றி வைத்தால், புளிக்காது இருக்கும்.

*மண் பானை தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். உடல் சூட்டை தணிக்கும்.

*மண்பாண்டம் தவிர்த்து, அந்தக்காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

*வெள்ளிப்பாத்திரம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றை சமப்படுத்தும்.

*அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிட்டு வந்தார்கள்.

*பித்தளை, செம்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தாது.

*செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பை நோய் வராது.

*இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

*எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

*ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது வாசனை ஊரைக் கூட்டும். உடலுக்கும் நல்லது.

*ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்துவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்!(மருத்துவம்)
Next post மார்கழி மாத சமையல்!! (மகளிர் பக்கம்)