அதை பற்றி நினைத்தால் சீக்கிரம் வயதாகும்? (மருத்துவம்)

Read Time:3 Minute, 5 Second

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முற்றிலும் உண்மை தான். சிந்தனைக்கு ஏற்ப தான் வாழ்க்கையும் அமையும். மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றினால் முகத்தில் கட்டாயமாக ஒரு பிரகாசமான ஒளி தோன்றும். அதுவே மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் உங்களது முகம் வயதானது போன்ற தோற்றத்தை அடையும்.

நாற்பதிலும் இளமை
ஒரு சிலர் தங்களது நாற்பது வயதிலும் கூட 20 வயது உள்ளவர்களை விடவும் இளமையாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களது உடற்பயிற்சி, உணவுமுறை, மற்றும் மனதில் தோன்றும் ஆரோக்கியமான சிந்தனைகளே ஆகும். ஆய்வுகள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களும் வயது முதிர்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்கிறது.

சந்தேகம்
எப்போது பார்த்தாலும் தன்னுடன் பழகுபவர்களை சந்தேகத்துக்கொண்டே இருப்பது, நட்புடன் பழகாமல் இருப்பது, சுயநலமாக இருப்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் இருக்க கூடாது. முதலில் நம் உடன் இருப்பவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது நம்பிக்கைக்கு உரியவருடன் பழக வேண்டும்.

நிறைந்த மனது
எதையும் நிறைந்த மனதுடன் திருப்தியாக செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தல் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.

இறந்த காலம்
இறந்த காலத்தை மீட்டெடுத்து அதில் மாற்றங்கள் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்ற போதிலும் கூட, எப்போதும் சிலர் இறந்த காலத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டே வாழ்வார்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். அதீத கவலையானது உங்களது அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பறித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

கனவில் வாழுதல்
சில இறந்த காலத்தை நினைத்து கவலை கொண்டு வாழ்வார்கள் என்றால், சிலரோ எதிர்காலத்தில் நடக்க கூடிய விஷயங்களை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆனால் அவர்கள் நிகழ்காலத்தில் உள்ள நிஜங்களை தொலைத்துவிட்டு, கனவு உலகில் வாழ்ந்து என்ன பயன்? தூய்மையான, நேர்மறையான சிந்தனைகளை கொண்டவர்களுடைய முகம் எப்போதுமே அழகாக தான் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடல் எடை குறைக்க – இது மட்டும் போதும்! (மருத்துவம்)
Next post சங்க கால உணவுகள்!! (மகளிர் பக்கம்)