சர்க்கரை நோய் & உயர் ரத்த அழுத்தம்…!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 18 Second

தவிர்க்க தப்பிக்க!

இன்று சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் அதிகமாகக் காணக்கூடிய நோயாக இருக்கிறது. நமது ரத்த குளுக்கோஸ் அளவையும் ரத்த அழுத்தத்தையும் எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதைப் பற்றி நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை பின்வரும் வழிமுறைகள் மூலம் திறம்பட நிர்வகிக்கலாம்

1.தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வது
2.சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவை தொடர்ந்து கண்காணிப்பது
3.தவறாமல் மருத்துவரை அணுகுதல்
4.சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தல்.  

இந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கவும் மருந்துகள் அவசியம். மருந்துகளின் விளைவைக் கண்காணிக்கவும் அல்லது மருந்தை குறைக்கவோ மாற்றவோ வழக்கமான சர்க்கரை பரிசோதனைகள் பிபி பதிவு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முக்கியமானது. சரியான ஊட்டச்சத்தை பராமரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடல் உழைப்பில் ஈடுபடுவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.

நாம் பின்வரும் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்

1.எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம்?

2.நம் அன்றாட உணவுகள் குறித்து நமக்கு விழிப்புணர்வு உள்ளதா?

3.நாம் அருகாமையில் கிடைக்கக்கூடிய உணவுகளை பற்றி நமக்கு தெரிந்திருக்கிறதா?

4.நாம் போதுமான அளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்கிறோமா?

5.தினசரி சர்க்கரை மற்றும் உப்பு அளவை கட்டுப்படுத்துகிறோமா?

6.நமது தூக்கம் போதுமானதாகவும், ஆழ்ந்ததாகவும் உள்ளதா?

7.நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோமா?

8.புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?   

ரீச் (REACH) என்பது 1999-இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் நோய்களின் கட்டுப்பாட்டிற்காக பணிபுரிந்து வருகின்றது. “சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் உங்கள் ஆரோக்கியம்” என்ற இவர்களின் ஆன்லைன் தகவல் கையேட்டை [email protected] மூலம் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்ப்பால் எனும் நனியமுது பெருக!(மருத்துவம்)
Next post பூஜையறை பராமரிப்பு!!! (மகளிர் பக்கம்)