சைவ பிரியர்களுக்கு மட்டும்! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 35 Second

உணவு என்றதும் நம் நினைவில் வருவது அசைவ உணவுகள் தான். மீன் குழம்பு, மீன் வறுவல், சிக்கன் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன், மட்டன் பெப்பர் மசாலா, மட்டன் ஷீக் கபாப் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அசைவ பிரியர்களைப் பொறுத்தவரை சிக்கன் மட்டுமே எடுத்துக் கொண்டால், அதில் மட்டுமே வகை வகையான உணவுகளை விருந்தாக படைக்கலாம். ஆனால் சைவ பிரியர்களுக்கு உணவுகள் பல வகை இருந்தாலும் அதில் குறிப்பிட்டு சொல்ல எந்த வகையான உணவுகளும் இல்லை. குறிப்பாக புரதம் நிறைந்த உணவுகள். இவர்களுக்காகவே புரதம் நிறைந்த டெம்பே என்ற உணவினை பல வகை ஃபிளேவர்களில் அறிமுகம் செய்துள்ளார் சித்தார்த் ராமசுப்பிரமணியன்.

சித்தார்த் உணவுப் பிரியர் மட்டுமல்லாமல், டிராவலரும் கூட. உணவு மற்றும் டிராவலிங் துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கும் சித்தார்த் அமெரிக்கா நியு ஜெர்சியில், அட்லான்டிக் நகரத்தில் உள்ள கேசினோ மற்றும் ஸ்பா என்ற ஓட்டலில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு பல நாடுகளுக்கு ஓட்டல் துறையில் பயணித்தவர் உலகம் முழுதும் 50க்கும் மேற்பட்ட ஓட்டல்களை துவங்க உதவியுள்ளார்.

‘‘ஓட்டல்கள் என்றால் விதவிதமான உணவுகள். பலரை ஒன்றுகூட செய்யும் வித்தை கொண்ட ஒரே துறை என்றால் அது உணவுத்துறை தான். நான் பல நாடுகளில் ஓட்டல்களை அமைச்சு தந்திருக்கிறேன். பெரும்பாலும் வெளிநாடு என்பதால், அவர்கள் அனைவரும் அசைவ உணவினை மட்டுமே விரும்பி சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். சைவ உணவு பிரியர்களுக்கு வெரைட்டி இல்லை என்றும், புரத சத்தும் சைவ உணவில் அதிக அளவு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்தேன். அந்த தேடல் தான் ‘ஹலோ டெம்பே’ ஆரம்பிக்க காரணமாக அமைந்தது.

டெம்பே உணவு புதுசு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன் தென் கிழக்கு ஆசியாவில் இந்த உணவு மிகவும் பிரபலம். முழுக்க முழுக்க சோயா மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவில் புரத சத்து மிகவும் அதிகம். பனீர் மற்றும் டோஃபூவிற்கு மாற்றாக பயன்படுத்தும் இதில், 100 கிராம் அளவில் 19 கிராம் புரத சத்து நிறைந்துள்ளது என்று உணவு ஆலோசகர்கள் கூறுகிறார்கள். உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது என்பதால், இதை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்’’ என்று கூறும் சித்தார்த் இதனை நான்கு ஃபிளேவர்களில் அறிமுகம் செய்துள்ளார்.

‘‘மீல்மேக்கர் போன்ற சோயா உருண்டைகள் மார்க்கெட்டில் உள்ளது. அதில் எந்தவித ஃபிளேவர்களும் இருக்காது. ஆனால் ஹலோ டெம்பேவினை நாச்சுரல், சிம்ப்ளி ராச்சா, பெப்பரி செஸ்வான் சில்லி மற்றும் ஸ்பைஸ்ட் தவா மசாலா என நான்கு ஃபிளேவர்களில் அறிமுகம் செய்திருக்கேன். இதை பார்பெர்க்யூ முதல் கிரேவி மற்றும் ஸ்டர் ஃபிரை என நம் சுவைக்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம். தற்போது ெசன்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ போன்ற இடங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் அறிமுகம் செய்திருக்கிறோம். மக்களின் விருப்பத்தினை அறிந்து அடுத்த கட்டமாக சாதாரண மளிகை கடைகளிலும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்’’ என்றார் சித்தார்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாமன் மகளிடம் கணவரை பறி கொடுத்தேன்!(மகளிர் பக்கம்)
Next post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)