கருப்பாய் இருப்பவருக்கு மேக்கப் போடுவது சுலபம்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 32 Second

கலரை மாற்றாமல் இருக்கும் நிறத்தை கூடுதல் அழகோடு காட்டுவதே(enhance) மேக்கப் எனப் பேசத் தொடங்கிய கௌசல்யா ‘ப்ரைடல் மேக்கப் ஆர்டிஸ்டாக’ பட்டையை கிளப்புபவர். கூடவே கொலாப்ரேஷன் ஷூட்ஸ், புரொமோஷன் ஷூட்ஸ், ஆட்(advertise) ஷூட்ஸ் என ஆல்வேஸ் பிஸி வுமன். ப்ரைடல் மேக்கப் குறித்து அவரிடம் பேசியபோது…கருப்பாய் இருப்பவர்களுக்கு மேக்கப் போடுவது இங்கே சுலபம். வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு மேக்கப் போடுவதே கடினம். காரணம் அவர்களை அழகாக மாற்றினால் பார்க்க நன்றாக இருக்காது. அதனால்தான் ப்ரைட்ஸ் மேக்கப் ஆர்டிஸ்டுகளை ஹயர் செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, மேக்கப் என்பது அவரவர் ஸ்கின்னிற்கு ஏற்ற ஷேடை சரியாய் தேர்ந்தெடுப்பது.

5 வருடமாக இந்தத் துறையில் இருக்கிறேன். இது மிகப் பெரிய பிஸினஸ் பளாட்ஃபார்ம். இப்போதெல்லாம் திருமணத்தில் போட்டோகிராபி பேக்கேஜ் ஒரு லட்சத்தில் தொடங்குகிறது. எங்களை பெரும்பாலும் இன்ஸ்டா பேஜில் நாங்கள் ப்ரோமோட் செய்வதால் இன்ஸ்டா புரொஃபைல் பார்த்தே கஸ்டமர்களும் முடிவு செய்து அழைக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தாண்டி வட மாநிலங்கள், கேரளா, ஹைதராபாத் எனவும்  அழைப்புகள் வரும். வெளிநாட்டுக் கஸ்டமர்களும் ரெகுலராக இருக்கிறார்கள்.

இது என்னோட  பிக் டே. ஒரு நாள் தான் எனக்கு வரும். அதில் நான் தி பெஸ்டா இருக்கனும் என்பதே பெரும்பாலான மணப்பெண்களின் கனவும் எதிர்பார்ப்பும்.  ப்ரைடல் மேக்கப்பில் இப்போதைய டிரென்ட் எச்.டி(HD) மற்றும் ஏர் ப்ரஷ்(airbrush). எச்டி ப்ரஷ் வைத்து செய்வது. பார்க்க ஷட்டிலாயிருக்கும். ஆனால் மேக்கப்போட நேரம் எடுக்கும். இதிலும் யு.எச்.டி. மேக்கப் 3டி மேக்கப் என வெரைட்டிகள் உண்டு. யுஎச்டி என்பது அல்ட்ரா எச்டி மேக்கப். இதில் கோட்டிங் அதிகமாகக் கொடுக்க வேண்டும். 3டி என்பது த்ரீ டைமென்ஷனில் நம்மை டிஃபைன் செய்து காட்டுவது. பெரும்பாலும் வடநாட்டினர் இதை விரும்புவார்கள்.

கம்பிரஷர் கன் டூல் வைத்து முகத்தில் ஸ்ப்ரே செய்வது ஏர் ப்ரஷ் மேக்கப். இதைச் செய்ய நேரம் அதிகம் தேவைப்படாது. மேக்கப் கலையாமல் கூடுதல் நேரம் இருக்கும். திருமண வரவேற்பு நிகழ்ச்சி  6 மணிக்கு என்றால் போட்டோ ஷூட் 2 மணிக்கே தொடங்கும். அப்படியே நைட் ஷாட்ஸ் எடுக்கத் தொடங்கி அது இரவு 2 மணி வரையும் போகும். மதியம் 2 மணிக்கு போடும் மேக்கப் இரவு 2 மணி வரை அதாவது, 10 மணி நேரம் ஸ்டேயா இருப்பதற்காகவே ப்ரைட்ஸ் ஏர் ப்ரஸ் மேக்கப் விரும்புகிறார்கள்.

தவிர எச்.டி மேக்கப்பில் டிரான்ஸ்பர் புரூஃப் மேக்கப், வாட்டர் புரூஃப் மேக்கப், ஸ்வெட் புரூஃப் மேக்கப் எனப் பிரிவுகள் உண்டு. இதில் டிரான்ஸ்பர் புரூஃப் தொட்டால் ஒட்டாது. திருமணத்தில் சிலர் மணப் பெண்ணை தொட்டும், கன்னத்தில் முத்தமிட்டும், கட்டி அணைத்தும் ஆசிர்வதிப்பர். இந்தமாதிரியான நிகழ்வுகளாலும் மேக்கப் கலையாமல் அப்படியே ஸ்டேயாகும். ஸ்விம்மிங்ஃபூல் சென்று போட்டோ சூட் செய்யும் திருமண ஜோடிகளுக்காக தண்ணீர் மேலே பட்டாலும் மேக்கப் கலையாத மாதிரி வாட்டர் புரூஃப் மேக்கப் உள்ளது. அதேபோல் ஸ்வெட் புரூஃப் மேக்கப் என்பது மணப்பெண்ணிற்கு வியர்க்கும்போது லைட்டாக டேப் செய்தால் போதும். வியர்வை மட்டும் போகும். மேக்கப் கலையாது. மேக்கப் புராடக்ட்களை கொஞ்சம் ஹைரெண்டாகக் கேட்டாலே இதெல்லாம் மணப்பெண்களுக்கு கிடைத்துவிடும்.

இப்போதெல்லாம் ஃபவுண்டேஷனில் மட்டுமே 25க்கும் மேற்பட்ட கலர் ஷேட்ஸ் உண்டு. இதில் புராடக்ட்ஸ்க்கு தகுந்த மாதிரியும் ஷேட்ஸ் பல உண்டு. நான் என்னை மாதிரியே இருக்கனும். என் ஸ்கின் மாதிரியே மேக்கப் வேண்டும். பட் என்னுடைய ஃப்யூட்சர்ஸ் என்கேன்ஸ் பண்ணிக் காட்டனும் என சில மணப் பெண்கள் கேட்பார்கள்.  சிலருக்கு கண்கள் சின்னதாக இருக்கும். வேறு சிலருக்கு மூக்கு ஷார்ப் இல்லாமல் இருக்கும். சிலருக்கு லிப்ஸ் சின்னதாக இருக்கும். இவர்களுக்கு கண்களையும் மூக்கையும் உதட்டையும் நன்றாக எடுத்துக்காட்ட வேண்டும்.  இன்னும் சில ப்ரைட்ஸ் மாப்பிள்ளை கலரா இருக்காரு அதனால் என் கலரை அப்படியே மாற்றிக் காட்டுங்கன்னு கேட்பாங்க.  

கல்யாணப் பெண், உடையில் தொடங்கி, குறிப்பாய் எனக்கு இதுதான் வேண்டும், இந்த மேக்கப்தான் போட வேண்டுமென எல்லாத்தையும் ஆன்லைனில் பார்த்து முடிவு செய்துவிட்டே நம்மை அணுகுகிறார்கள். அதே மாதிரி இந்த புராடக்ட்தான் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். சில ப்ரைட்ஸ் எனக்கு ஐ லேஷஸ் என்ன வைக்கப் போறீங்க, லென்ஸ் என்ன வைக்கப் போறீங்க, ப்ளெஸ் என்ன கலரில் எனக்கு போடப் போறீங்க என கேட்பார்கள். முக்கியமாக கஷ்டமர்களுக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்பதில் நான் உறுதி காட்டுவேன். அதைவிட முக்கியம் குவாலிட்டி. எல்லா புராடக்டும் எல்லா ஷேட்ஸும் என்னிடத்தில் உண்டு.

இருப்பதிலே புராடக்ட் இன்வெஸ்ட்மென்ட்தான்  எங்களுக்கு அதிகமாக லட்சங்களில் இருக்கும். சில மணப் பெண்களின் மைன்ட் திருமணம் நெருங்கும்போது மாறும். எனவே ஒரு வாரத்திற்கு முன்பே கால் செய்து திருமண மேக்கப் குறித்து மீண்டும் அவர்களிடத்தில் பேசிடுவேன்.ஒரே நாளில் நான்கிற்கு மேற்பட்ட திருமணத்திற்கு மேக்கப் போட்ட அனுபவங்களும் உண்டு. அப்போது டீமாக களத்தில் இறங்குவோம். கூடவே ஹேர் ஸ்டைலிஸ்ட், சேரி டிராப்பிங் எனத் தனியாக ஆட்கள் இருப்பார்கள். காலை 6 மணி முகூர்த்தமெனில் அதிகாலை போட்டோ ஷூட் இருக்கும்.  

4 மணிக்கு முன்பே எழுந்து மணப்பெண் மேக்கப் முடிக்கனும். முகூர்த்த நேரத்திற்குள் பெண்ணை தயார்படுத்த வேண்டும். ஆனால் மணமகள் இரவெல்லாம் போட்டோஷூட் முடித்து அதிகாலைதான் படுத்து அப்போதுதான் எழுந்து தாமதமாக குளித்திருப்பார். அதற்குள் முகூர்த்தம் நேரம் நெருங்க, எல்லோரும் பரபரப்பாகி மேக்கப் ஆர்டிஸ்டை அவசரப்படுத்துவார்கள்.

மேக்கப் ஆர்டிஸ்டால்தான் தாமதம் என நம்மை நோக்கி விரல் நீட்டுவார்கள். அனைத்தையும் சிரிச்சு சமாளிக்கனும். அதேநேரம் மேக்கப்பும் சரியா போடனும். வி.ஐ.பி கஷ்டமர்களான நட்சத்திரா நாகேஷ், ஜனனி அசோக் குமார்,ஷாலு ஷம்மு, சித்து விஜய், ஐஸ்வர்யா தத்தா, லஷ்யா மஞ்சுநாத், கண்மணி மனோகரன், செய்தி வாசிப்பாளர்கள் அனிதா சம்பத், சரண்யா போன்றவர்களுக்கு அவர்களின் புரொஃபைல்களை பில்ட் செய்வதற்கு ப்ரொமோஷன் ஷூட், கொலாப்ரேஷன் ஷூட் என மேக்கப் போட்டுள்ளேன். என் இன்ஸ்டா பேஜில் அவற்றை நீங்கள் பார்க்கலாம் என விடைபெற்றார்.

மேக்கப் ஆர்டிஸ்ட் பக்கங்கள்…

நான் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் எம்.காம் முடித்த மாணவி. கல்லூரி இரண்டாம் ஆண்டிலே கல்லூரி நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ என தோழிகளுக்கு மேக்கப் போடத் தொடங்கி, அப்படியே மேக்கப் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. நீ மேக்கப் ஆர்டிஸ்டா மாறிடு என ஃப்ரெண்ட்ஸ் உசுப்பேற்ற, படிப்பை முடித்ததும் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரின் அசிஸ்டென்டாகி பிராக்டிக்கலாக தொழிலைக் கற்றுக் கொண்டேன். பிறகு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக ஃபாரின் ஆர்டிஸ்களிடமும் ப்ரைடல் மேக்கப் குறித்து நிறைய கற்றுக் கொண்டு, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக என்னை டெவலப் செய்து கொண்டேன்.

எல்லா முகூர்த்த மாதங்களிலும் நான் பிஸி. என் கல்லூரி தோழிகள் கால் செய்து நீ ஃப்ரீயா இருக்க மாட்ட, இந்தத் தேதியில் அவலெபிளா எனக் கேட்பார்கள். ஒரு மணப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சென்றாலே அவரின் தோழி, உறவினர்னு க்ளையண்ட் எங்களுக்கு அடுத்தடுத்து கிடச்சுருவாங்க. தவிர, கிளையன்ட்ஸ் எல்லாமே என் இன்ஸ்டா பேஜ் பார்த்து வருபவர்களே. 500 பாலலோவர்ஸில் ஆரம்பித்து இன்று 25 ஆயிரத்தை தொட்டாச்சு. முகூர்த்தம் இல்லாத மாதங்களில் மாணவர்களுக்கு ப்ரைடல் மேக்கப் வகுப்புகளை எடுக்கிறேன். ஒரு வகுப்பில் 6 மாணவர்கள் மட்டுமே.

15 நாட்கள் செய்முறை பயிற்சி கட்டாயம் உண்டு. ஆர்வமும் திறமையும் அர்ப்பணிப்பும் உள்ள மாணவர்களை ஹயர் செய்து என் டீமில் அப்படியே வைத்துக்கொள்வேன்.இந்தத் துறையில் வருமானம் அதிகமாக இருந்தாலும், தூக்கம் இழந்த இரவுகளே எங்களுக்கு அதிகம். ஒரு நாளைக்கு 1 மணிநேரம் தூங்கினால் எனக்கு அது மிகப் பெரிய விசயம். தொழில் நிமித்தம் அலைச்சலும் உண்டு. நம் தொழிலைப் புரிந்துகொள்ளும் கணவனும், குடும்பமும் அமைவது எல்லாத்தையும் விட மிகவும் முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தயிர் தகவல்கள்!! (மருத்துவம்)
Next post உச்சி முதல் உள்ளங்கால் வரை…!! (மகளிர் பக்கம்)