செர்ரி… நினைத்தாலே இனிக்கும்!(மருத்துவம்)

Read Time:3 Minute, 54 Second

பார்த்தாலே சுவைப்பதற்கான ஆசையைத்தூண்டும் கவர்ச்சி கொண்டது செர்ரி பழம். அதில் என்னென்ன விசேஷங்கள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோமா?!

* செர்ரி பழம் குறைந்த கலோரி அளவையும் மற்றும் குறைந்த கொழுப்பு சத்தையும் உடையது. பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது.

* இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி இருவகைகளுமே அத்தியாவசியமான பல சத்துக்களை கொண்டுள்ளது. அதிக சதை மற்றும் சாறு உள்ளவை. திராட்சையைப் போன்ற சுவை உடையவை செர்ரி பழங்கள் நன்மையை தரக்கூடிய பல நிறமிகளை உடையது. சிவப்பு, அல்லது ஊதா நிறங்களில் இருக்கும் அதன் தோல்கள், ஆன்தோசையனின் பிக்மென்ட்ஸ்சை அதிகமாக கொண்டது. இந்த ஆன்தோசையனின் பிக்மென்ட்ஸ் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்கஸின் ஆதாரமாக உள்ளது. வயது மூப்பினால் வரும் உடற் பருமன், புற்றுநோய், நரம்பியல் நோய் மற்றும் நீரிழிவு நோய் அணுகாமல் நமது உடலை பலப்படுத்துகிறது.

* செர்ரிகளில் மெலடோனின் என்னும் ஒரு ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன் நமது உடலின் உயிரியல் கடிகாரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் நமது நரம்புகள் அமைதி அடைகின்றன, நல்ல அமைதியான உறக்கமும் கிடைக்கிறது.

* தூக்கமின்மையினால் வரும் தலைவலி, எரிச்சல், சோர்வு இன்றி புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடிகிறது. மேலும், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம், மற்றும் மாங்கனீஸ் போன்ற கனிம ஆதாரங் கலும் நமது உடலுக்கு தேவையான சரியான அளவில் செர்ரி பழத்தில் உள்ளது. பொட்டாசியம், செல் மற்றும் உடல் திரவங்களின் முக்கிய பாகமாகும், இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

* செர்ரிக்களில் உள்ள ஆன்தோசையனின், மூட்டுகளில் தேங்கும் யூரிக் அமிலத்தை அகற்றி, மூட்டு வலி, வீக்கத்தை குறைக்கிறது. புதிய பழுத்த செர்ரிக்களை சிறிது நாட்கள் மட்டுமே வைத்து கொள்ள முடியும்.

* கடைகளில் இருந்து வாங்கும்போது, பிரகாசமான, பளபளப்பான தோல்களையும், பச்சை நிற காம்பினையும் கொண்டு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்டதை வாங்காதீர்கள்

ஃப்ரெஷ் செர்ரிக்களை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். ஆனால் பதப்படுத்தப்பட்டு, கூடுதல் சுவைக்காக சர்க்கரை கலந்த செர்ரிக்களை கடைகளில் வாங்கி அதிகளவு உட்கொள்ளக்கூடாது.  இதில் இனிப்புச் சுவைக்காக அதிகளவு சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். இது உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். குறிப்பாக நீரிழிவு உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வைட்டமின் சி நிறைந்த குடை மிளகாய்!! (மருத்துவம்)
Next post தோல்பாவை கூத்து!! (மகளிர் பக்கம்)