வதைக்கும் வெர்ட்டிகோ…தீர்வு என்ன?(மருத்துவம்)

Read Time:7 Minute, 27 Second

சீதா 30 வயது இல்லத்தரசி. ஒருநாள், காலை 11:00 மணிக்கு வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தவர் அப்படியே முன்புறம் மயங்கிச் சரிந்துவிட்டார். அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர் இது வெர்ட்டிகோ பிரச்னை என்றார். அப்போதுதான் அப்படி ஒரு நோய் இருப்பதே தெரியவந்தது கலைவாணிக்கு. உண்மையில், சீதாவுக்கு மட்டும் அல்ல; பலரும் இப்படியான நோய்கள் பற்றி ஏதும் தெரியாமல்தான் அந்த நோய்களுடனேயே வருடக்கணக்காகப் புழங்கிவருகிறோம். நோய்களில் சிறியது பெரியது இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது குறித்து நமக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம். வெர்ட்டிகோ என்றால் என்ன… இது ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன என்று பார்ப்போம்.

நம் உடலில் உள்ள எல்லா பாகங்களையும் பாதுகாத்து வைப்பது நம் உடலின் முக்கிய உறுப்புகளாகிய கண், காது மற்றும் மூளை ஆகியவற்றின் செயல்பாடுகளில் வரும் குறைபாட்டால் வருவது வெர்டிகோ எனப்படும் நோய். வெர்டிகோ என்பது கிறுகிறுப்பு என்றும் சொல்வார்கள். தலை பாரம், தலைச்சுற்றுதல், மயக்கம், உடலெல்லாம் சுற்றுவது, மனக்குழப்பம், பார்வை மங்குவது, கண் எரிச்சல், காது கேளாமல் போவது, உடலெல்லாம் ஊர்வது போன்ற அறிகுறிகளோடு தோன்றும் குறைபாடு இது.

 வெர்டிகோவின் காரணம்

 உடலில் கண், காது மற்றும் மூளை நரம்பு மண்டலம் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். அவற்றில் ஏற்படும் பிரச்னை காரணமாகவே இது ஏற்படும். மூளை நரம்பு மண்டலத்தில் இரு வகை நரம்புகள் இருக்கும், அவை பெரிபெரல் நரம்பு  மற்றும் ஹ்ரானியல் நரம்பு. ஹ்ரானியல் நரம்பில் ,மொத்தம் 24 நரம்புகள் இருக்கும். ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு வேலையைச் செய்யும். அதில் மூன்று, நான்கு, ஆறு கண் அசைவுக்கும், எட்டு காது செயல்பாட்டுக்கும் உதவிபுரிகிறது. இந்த நான்கு நரம்புகள்தான் மூளையுடன் இணைப்பில் இருக்கும். இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்தான் வெர்டிகோ ஏற்படும். சிறுமூளைக்கும் காதுக்கும் இடையில் ஏற்படும் மூளைக்கட்டிகளாலும் வெர்டிகோ ஏற்படும்.

காதிலும் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்ற பிரிவுகள் உள்ளன. உள் காதில் அரை வட்டக் குழாய்கள் என்ற அமைப்பு இருக்கும். நம் தலைநிமிரும் போதும், திரும்பும்போதும் நம் உடலைச் சீராக வைத்துக்கொள்ளும். இதில் குறைபாடு ஏற்பட்டாலும் வெர்டிகோ தோன்றும்.

பிசியலாஜிக்கல் வெர்டிகோ

உடலில் எந்த ஒரு கோளாறு இல்லை என்றாலும் வெர்டிகோ வரவாய்ப்பு உள்ளது. இதனை பிசியலாஜிக்கல் வெர்டிகோ என்பார்கள். கழுத்தை மிகவும் அண்ணாந்து பார்த்தாலோ, கப்பலில் செல்லும்போதோ, ராட்டினத்தில் சுற்றும் போதோ, சுற்றி சுற்றி விளையாடும் போதோ இந்த வெர்டிகோ ஏற்படும். உயரத்திலிருந்து கீழே வரும்போதும் இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. சினிமா பார்க்கும்போதும், காரில் பயணிக்கும் போதும்கூட ஏற்படலாம்.

வேறு காரணங்கள்

கண்களைச் சுற்றி இருக்கும் தசைகளில் ஏற்படும் கோளாறுகளாலும் ஏற்படலாம். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கும், மருந்துகளின் பாதிப்பினால்கூட தலைசுற்றுவது ஏற்படும். மற்ற தசைகளில் ஏற்படும் பாதிப்புகளினாலும் வெர்டிகோ ஏற்படும். ஹெர்பஸ் போன்ற வைரஸ் தாக்குதலினாலும் நரம்புகளில் கிருமித்தொற்று ஏற்படும். இது வெர்டிகோவை உருவாக்கும். காசநோய்க்கு எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சைகலாஜிக்கல் வெர்டிகோ

மனத்தளவில் இருக்கும் பயத்தால்கூட வெர்டிகோ ஏற்படும். கூட்டத்தைப் பார்த்தாலும் ஒரு வெட்டவெளியான இடத்தைப் பார்த்தாலும், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்து வெளியே சென்றாலும் வெர்டிகோ வர வாய்ப்புள்ளது. தாழ்வு மனப்பான்மையும் இதற்கு ஒரு காரணம்.

தீர்வுகள்

கண், காது, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், மூன்று மருத்துவர்களையும் பரிந்துரைக்கலாம். அனைத்துவிதமான பரிசோதனைகளையும் செய்த பின்னர் அதற்குத் தகுந்த சிகிச்சை முறைகளைப் பின்பற்றுவர். அறுவைசிகிச்சைகள், மாத்திரைகள் மூலமாக மூளைக் கட்டிகள், நரம்புக் கோளாறுகள் ஆகியவற்றைச் சரிசெய்துவிட்டால் வெர்டிகோவிலிருந்து விடுபடலாம்.

தலையைச் சரியான கோணத்துக்குக் கொண்டுவருவது, கப்பலிலோ காரிலோ செல்லும்போது நேரான பாதைக்குத் திரும்பிவிடுவது, ராட்டினம் சுற்றுவதை நிறுத்துவது, உயரத்திலிருந்து கீழே வந்துவிடுவது போன்றவை பிசியலாஜிக்கல் வெர்டிகோவைச் சரியாக்கும். சைகலாஜிக்கல் வெர்டிகோ ஏற்பட்டால் மனத்தளவில் அவர்களை வலுப்படுத்த வேண்டும். கவுன்சிலிங் கொடுப்பதனால் சிறிது மாறுதல் ஏற்படும். நல்ல சிந்தனைகளைக் கொடுத்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வராமல் தடுக்க…

நிறைய காரணங்களை நம்மால் தவிர்க்க இயலாது. இருப்பினும் முடிந்தவரை பாதுகாத்துக்கொள்ளலாம். முறையான உடற்பயிற்சிகள், யோகா, மனதைரி
யத்துடன் இருப்பது போன்றவற்றைச் செய்தால் பயன்கள் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழகு செய்யும் அரிசி நீர்! (மருத்துவம்)
Next post கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது!(மகளிர் பக்கம்)