சபாஷ் சப்போட்டா! (மருத்துவம்)

Read Time:3 Minute, 56 Second

உலக அதிசயங்களில் ஒன்றான     சிச்சென் இட்சாவில், சப்போட்டா  பயிரிடப்பட்டதற்கான  அடையங்கள்  கிடைத்துள்ளனவாம்.  சியாப்பாஸ் மாகாணத்தில்  கிடைத்த  கல்வெட்டு  ஒன்றில்,  ஹானாப் பகால்  என்னும்  அரசனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அரசனின்  பின்னணியில்  சப்போட்டா  மரம்  ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சப்போட்டாவில்  உள்ள சத்துகள்

வைட்டமின் சி மற்றும் ஏ,  நார்சத்து,  புரோட்டின் , இரும்புசத்து,  கால்சியம்,  பாஸ்பரஸ் போன்ற சத்துகள்  சப்போட்டா  பழத்தில் நிறைந்துள்ளன.

மருத்துவப் பயன்கள்

சப்போட்டா பழத்தை  அரைத்துச் சாற்றை தேனில்  கலந்து சாப்பிட்டு  வந்தால் வயிறு  சம்பந்தப்பட்ட  கோளாறுகள், வயிற்றுவலி ஆகியவை  குணமாகும். சப்போட்டா  பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக  நறுக்கி இவற்றை  ஒன்றாகக்  கலந்து அரைத்து  பஞ்சாமிர்தம்  செய்து சாப்பிட உடலுக்கு  வலிமையும் உறுதியையும் தரும். சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து  48 நாட்கள்  சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல்,  வயிற்றுவலி,  வயிற்றெரிச்சல் இவற்றைப்  போக்கும்.சப்போட்டா  பழத்தைத் தோல் நீக்கி,  அத்துடன் பால் சேர்த்து  அரைத்துச் சாப்பிட்டு வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

சப்போட்டா பழத்திலுள்ள  சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக  வைக்கும் குணம்  கொண்டவை.  இவை, ரத்தநாளங்களில்   கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகிறது.

சப்போட்டாவின்  பயன்கள்

சப்போட்டா பழத்தில்  வைட்டமின் ஏ அதிக  அளவு நிரம்பி உள்ளதால் நமது கண்களுக்கு நன்மை தருவதுடன்  முதுமையை  தள்ளிப்போட  வல்லது.
நாம்  சுறுசுறுப்பாக  நடந்து செல்ல நமக்கு மிகவும்  அவசியமாக இருப்பது  ஆற்றல். அந்த ஆற்றலை  அதிகளவு  கொண்டுள்ளது சப்போட்டா  பழம்.  ஏனெனில்  உடலுக்கு  தேவையான  ஆற்றலை  வழங்கும்  குளுக்கோஸை  கொண்டுள்ளது.

சப்போட்டாவில்  உள்ள  நார்சத்து  

மற்றும்  ஊட்டச்சத்துகள்  புற்றுநோய்க்கு எதிரான  பாதுகாப்பை  வழங்குகிறது. அதாவது  வாய் குழி  புற்றுநோய்,  பெருங்குடல் சளி  சவ்வை  நச்சுகளிடமிருந்து  பாதுகாக்க  வைட்டமின்  ஏ வை  கொண்டு  பாதுகாப்பு  வழங்குகிறது.சப்போட்டா  பழத்தை உண்ட பின்,  ஒரு தேக்கரண்டி  சீரகத்தை  நன்கு மென்று  விழுங்கினால் பித்தம் விலகும்.  பித்தத்தை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக  இது உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுமையில் ஆனந்தம்! (மருத்துவம்)
Next post முதலிரவு… சில யோசனைகள்…!! (அவ்வப்போது கிளாமர்)