ஆயுளைக் காக்கும் ஆயுர்வேதம்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 34 Second

உடல் நலம் மற்றும் நோய்

உடல் நலம் மற்றும் நோயானது உடலின் பல்வேறு உட்பொருட்களின் இடையே சமநிலை மற்றும் மொத்த உடல் அணியும் ஒரு சீரான நிலையில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது பொறுத்து சார்ந்திருக்கிறது. உடலின் உள் மற்றும் வெளிப்புறக் காரணிகளும் உடலின் இயற்கையான சமநிலையில் தொந்தரவு உண்டாக்கி நோய்களை உருவாக்க முடியும். இந்த சமநிலை இழப்பானது முறையில்லாத உணவு முறை, விரும்பத்தகாத பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையில் கவனம் செலுத்தாமை ஆகியவைகளினால் ஏற்படுகிறது. பருவகால இயல்பு, முறையற்ற உடற்பயிற்சி அல்லது உடலின் உறுப்புகளின் ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் இந்த தகுதியில்லாத செயல்களினால் உடலிலும், மனதிலும், உடல் சமநிலையில் குழப்பம் உண்டாக்கும். உடலில் மற்றும் கடினமான மன இறுக்கம் சரியான வாழ்க்கை முறை, நன்னடத்தை போன்றவை பஞ்சகர்மா மற்றும் ரசாயனத் தீர்வுக்குள்ளது.

நோயறிதல்

ஆயுர்வேதத்தில் உடல் பரிசோதனையில் எப்போதும் குறிப்பிட்ட உறுப்பை மட்டும் பரிசோதிக்காமல் முழு உடலையும் பரிசோதிப்பார். மருத்துவர் மிக கவனமாக நோயாளிகளின் உடல் உறுப்புகளில் செயல், மனநிலை ஒழுங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துவர். பாதிக்கப்பட்ட உடல் திசுக்கள், உடல் உறுப்புகளில் எந்த நோய் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது, எந்த தளத்தில் அமைந்துள்ளது என பரிசோதனை செய்வர். உடலின் மூலக்கூறு (திசுக்கள்)இருப்பிடம், தினசரி வேலைமுறை, உணவு பழக்கவழக்கங்கள் சமூக, பொருளாதார மற்றும் நோயாளியின் சுற்றுச் சூழல் போன்ற நிலைமைகளுக்கு கீழ்கண்டவாறு பரிசோதனையில் செய்யப்படுகிறது:

*பொது உடல் பரிசோதனை
*துடிப்புப் பரிசோதனை
*சிறுநீர் பரிசோதனை
*மலம் பரிசோதனை கண்கள் மற்றும் நாக்கு பரிசோதனை
*தொட்டுணரக்கூடிய மற்றும் செவிப்புலன் செயல்பாடு பரிசோதனை ஆகும்.

சிகிச்சை

அடிப்படையாக சிகிச்சை முறை தனிமைப்படுத்தி அணுகுவது ஆகும். இப்படி நோயாளியை தனிமையாக்கி சிகிச்சை அளிக்கும் மருத்துவரால், இயல்பாக சுதந்திரமாக நோயாளியை நோயில் இருந்து விடுவித்து உடல் நலத்தைஅளிக்கிறார். ஆயுர்வேதாவின் உயர் பணி குறிக்கோள் உடல்நலத்தைப் பேணி, நலத்தை மேம்படுத்தி, நோய் தடுப்பு, நோயை குணமாக்குதல் ஆகும். ஒவ்வொரு உடலிலும் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை – நோய் உண்டான காரணம், உண்டான இடம், பஞ்சகர்ம விதிமுறைகளின்படி மருந்துகள், சரியான உணவு பழக்கம், செயல் மற்றும் நடப்புமுறை , சமநிலையை திரும்ப அடைதல், உடலை வலிமையாக்குதல், போன்றவைகளை கூடிய வரை எதிர்காலத்தில் சரிசெய்ய முடியும்.

சிகிச்சை பொதுவாக மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, குறிப்பிட்ட உணவுக் கட்டுபாடு, பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடு இந்த மூன்று நடவடிக்கைகளை பயன்படுத்த இரண்டு வழிகளை கையாளப்படுகிறது. முதல் அணுகுமுறையானது நோய் எதிர்ப்பு தூண்டுதலை கணக்கிட்டு, நோயின் காரணத்தின் உண்மையை கண்டறிந்து நோயின் வெளிப்பாடுகள் வைத்து கையாளப்படுகிறது. இரண்டாவது அணுகுமுறையில் மருந்து, உணவு மற்றும் செயல்பாடு ஆகிய மூன்று நடவடிக்கைகளைக் கொண்டு நோய்களுக்கான காரணிகள் மற்றும் வெளிப்பாடுகள் போன்ற விளைவுகளை சரி செய்ய கையாளப்படுகிறது. சிகிச்சை அணுகு முறைகளை இந்த இரண்டு வகையான முறையே “விப்ரீட்டர்”மற்றும் ‘விப்ரீட்டத்தகரி’ சிகிச்சைகள் எனப்படுகின்றன.

சிகிச்சைகள் வெற்றிகரமாக அமைய நான்கு விசயங்கள் அத்தியாவசியமாக உள்ளன. அவைகள்:

*மருத்துவர்
*மருந்து எடுத்துக்கொள்ளுதல்
*மருத்துவ பணியாளர்கள்
*நோயாளி

இதில் முதலில் வருபவர் மருத்துவர் ஆவார். அவர் தொழிநுட்பத் திறன், விஞ்ஞான அறிவு, தூய்மை மற்றும் மனிதனை புரிந்து கொள்ளும் , அறிவுகூர்மை மற்றும் மனிதன் சேவை செய்பவராக இருக்க வேண்டும். அடுத்ததாக பயன்படுத்தும் மருந்துகள் உயர்ந்த தரத்துடன் போதுமான அளவுடன், பரவலாகவும் கிடைக்க வேண்டும். மூன்றாவதாக மருத்துவமனை ஊழியர்கள் பங்கு ஆகும். பாசம், அனுதாபம், அறிவார்ந்த, சுத்தமான மற்றும் சமயோசிதம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

நான்காவதாக நோயாளிதன்னை கூட்டு ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் மருத்துவரிடம் தன்நிலையை எடுத்துக்கூறுதல் வேண்டும்.ஆயுர்வேதம் நோய் காரணியின் இறுதியாக உள்ள கடைசி அறிகுறிகள் தெரியும் வரை செயல்படுகிறது. உண்மையான விளைவுகளைக் கண்டறிந்து. வெளிப்படையான மருத்துவத்தை செய்வதன் மூலம் நோயாளி குணமாக்கப்படுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மீன் வளர்ப்பு தரும் ஆனந்தம்! (மருத்துவம்)
Next post பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)