ஹேப்பி லைஃப் ஹெல்தி லைஃப்… 15!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 9 Second
  1. குளிர்ந்த நீரில் மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.
  2. மாலை 5 மணிக்கு மேல் கனமான உணவுகளை சாப்பிட வேண்டாம்.
  3. காலையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் குறைந்த அளவே குடிக்க வேண்டும்.
  4. குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவு 10 மணிக்கு முன் தூங்க வேண்டும். காலை 5 மணிக்குமேல் தூங்கக் கூடாது.
  5. உணவு உண்ட உடனேயே படுக்கச் செல்லக் கூடாது. அது தவறான முறையாகும்.
  6. தொலைபேசியில் பேசும்போது முடிந்தவரை இடது காதில் வைத்து பேசுவதே நன்மை அளிக்கும்.
  7. தொலைபேசியில் பேட்டரி சார்ஜ் 1 பாயின்ட்டுக்கும் குறைவாக இருக்கும்போது, பேசுவது கூடாது, காரணம், அந்த சமயத்தில் தொலைபேசியின் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகரிக்கும்.
  8. தினசரி 20 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
  9. தினம் ஒரு மணி நேரம் ரிலாக்ஸாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
  10. டிவி பார்ப்பதை குறைத்துக்கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளையும் அதற்கு பழக்குங்கள்.
  11. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
  12. பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
  13. பசிக்கும் போது பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள்.
  14. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
  15. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலை தளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”!! (அவ்வப்போது கிளாமர்)
Next post இன்னா நாற்பது! இனியவை நாற்பது! (மருத்துவம்)