யாருடைய நெருக்குதலாலும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை: இலங்கை அதிபர் ராஜபட்ச

Read Time:4 Minute, 8 Second

animahindaஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாருடைய நெருக்குதல் காரணமாகவும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல முன்னணி நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ராஜபட்சவின் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கை விடுதலைக் கட்சியின் கூட்டம் சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அப்போது அதில் அவர் பேசியதாவது: இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உலக நாடுகள் பலவும் இலங்கையை வற்புறுத்தி வருகின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களுக்கு போர் நிறுத்தத்தை அரசு அறிவித்தது. சண்டை நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை மீட்பதற்காக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி அப்பகுதியிலிருந்து மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெளியேறவில்லை. 815 பேர் மட்டுமே அரசின் பாதுகாப்புப் பகுதிக்கு வந்துள்ளனர். ஆதலால் சர்வதேச நாடுகளின் முடிவுகளுக்கு கட்டுப்படுவதா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டிய உரிமை மக்களிடம் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்து சில அரசியல்வாதிகள் இலங்கை மீது அவதூறான பிரசாரத்தை பரப்பிவருகின்றனர். இதுதொடர்பாக சர்வதேச நாடுகளிடம் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவருகின்றனர். அரசின் கொள்கை மீது முடிவு எடுப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை. அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும். அதுவும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே எடுக்கப்படும். நாடு எப்போதும் ஒற்றுமையாக ஒருமைப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர். நாட்டைத் துண்டாடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டவர்களிடமிருந்து நாடு தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது என்றார். விரைவில் பிடிபடுவார் பிரபாகரன்: புலிகள் தலைவர் பிரபாகரனை உயிருடனோ அல்லது பிணமாகவோ விரைவில் பிடிப்போம் என்று ராஜபட்ச தெரிவித்தார். “அரசு அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்த வாய்ப்பை பிரபாகரனும், அவருடைய சகாக்களும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் அவர்கள் சரணடையவோ அல்லது அவர்கள் வசம் உள்ள தமிழர்களை விடுவிக்கவோ செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். பிரபாகரனின் நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்’ என்று வெள்ளிக்கிழமை இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “யாருடைய நெருக்குதலாலும் நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை: இலங்கை அதிபர் ராஜபட்ச

  1. யுத்த நிறுத்தத்தால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை…
    அது புலிகள் மீண்டு வரவே உதவும்…

    ஒரு ஜனநாயகம் வரவேண்டுமானால், இந்த பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்.

    மக்களால் தெரிவு செய்யப்பட்ட (ஆயுதத்தால் அல்ல) ஓர் தலைவன் தமிழரை ஆளவேண்டும், அதுவும் ஒன்று பட்ட இலங்கைக்குள்…
    மூத்த அரசியல் பழமான திரு ஆனந்த சங்கரியே மிகப் பொருத்தமானவர்…
    எனினும்..மக்கள் முடிவு செய்யட்டும்….

    இலங்கை நம் நாடு… சிங்கள தமிழ் முஸ்லிம் பரங்கி இன மக்களின் நாடு…..ஒரு அழகிய சொர்க்கபுரி… ஒன்று பட்டு இந்த பயங்கரவாதத்தை அழிப்போம்

Leave a Reply

Previous post போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: தமிழ் தேசிய கூட்டணி
Next post கிழக்கு மாகாண சபையில் நாளை நடைபெறவிருந்த விவாதம் ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து மே மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைப்பு