விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே

Read Time:3 Minute, 23 Second

விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால் நோர்வே மக்கள் மிகவும் களைப்படைந் திருப்பதாகவும், இவ்வாறான போராட்டங்களால் ஏற்படும் தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ளமுடியாதிருப்பதாகவும் நோர்வேயின் எழுத்தாளர் ஜான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். “நோர்வேயிலுள்ள தமிழர்கள் சிறந்த முறையிலேயே நடத்தப்பட்டனர். ஆனால் விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான செயற்பாட்டுக்காக அவர்களில் சிலர் தற்பொழுது நோர்வேயைக் குற்றஞ்சாட்டுகின்றனர்” என அவர் கூறியுள்ளார். “இந்தத் தமிழர்கள் பிரதமர் அலுவலத்தை மறித்துப் போராட்டங்களை நடத்தியும் இலங்கைத் தூதரகத்தைச் சேதமாக்கியும் நகரை முடங்கச் செய்ய முயற்சிக்கின்றனர். நிலைமை கையை மீறிச் சென்றிருப்பதுடன் தமது நாட்டில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவிய நோர்வே மக்களுக்கு இவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது என்பதே தமது நம்பிக்கை” என அந்த எழுத்தாளர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதல்கள் பட்டினி மற்றும் இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகள் மற்றும் மக்களுக்கு உதவிவழங்கும் நீண்டகால கலாச்சாரத்தைக் கொண்ட நாடான நோர்வே உலகத்திலேயே புகழ்வாந்த நோபல் பரிசை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். “எமது பெருந்தன்மையை பலவீனத்துக்கான அடையாளமாகக் கொள்ளக்கூடாது. உலகளாவிய ரீதியில் 30ற்கும் அதிகமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 4.5 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நோர்வேயால் அவை அனைத்தையும் தீர்க்கமுடியும் என எதிர்பார்க்க இயலாது” என்றார் ஜான் ஹோர்ன்.
அதேநேரம் நோர்வே சமாதான அனுசரணையாளர்களேயன்றி அவர்களால் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்க முடியாது என விடுதலைப் புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டியன் ஸ்ரோக் கூறியுள்ளார். “சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயால் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்க முடியாது. தமது பிழைகளைப் பரிசீலித்து அரசியல் தீர்வொன்றுக்குச் செல்ல சம்பந்தப்பட்ட தரப்பினராலேயே முடியும். இரண்டு தரப்பும் பேச்சுக்கு வருமாறு எம்மால் அழைப்புவிடுக்க மாத்திரமே எம்மால் முடியும்” என்றார் பேராசிரியர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே

  1. எந்த நாட்டுக்கு தான் சகிக்க முடியும்…
    ஒரே கேவலமாக இருக்கு….மக்கள் சாகிறத்துக்கு ஆர்ப்பாட்டம் செய்ய புலிக்கொடி தேவையா? அவர் லீடர் பிரபாகரன் எண்டு கத்த வேணுமா?
    கனடா வீதியெல்லாம் இப்போ பாத்ரூம் ஆக்கிவிட்டாங்கள்…

    எல்லா இலங்கையரையும் திருப்பு அனுப்பினாலும் ஆச்சர்யப்பட முடியாது…..
    ஜனநாய போராட்டமா இது? அடிப்பது உடைப்பது… போக்குவரத்தை தடை செய்வது…
    கேவலம்.. இந்த வீரர்கள் எல்லாம் இங்க தான் உது செய்வினம்…ஏனெண்டால் இங்க சட்டம் மிக மென்மையானது….

    உந்த வீரர்கள் எல்லாம் ஏன் இங்க வந்தவை… தமிழ் ஈழத்தில நிண்டு போராடியிருக்கலாம் தானே……

    தங்களுக்குள் நினைப்பு தாங்கள் வீரர்கள் எண்டு…… வெளி நாடுகளை நாறடிக்காம தயவு செய்து தமிழ் ஈழத்துக்கு போய் போராடுங்கள்…

Leave a Reply

Previous post விசேட பிரதிநிதியை ஐ.நாவுக்கு அனுப்ப பிரித்தானியாவுக்கு உரிமையில்லை:கெஹலிய ரம்புக்வெல
Next post பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..