உரிமைகள் காப்பகம் அவசர அழைப்பு

Read Time:2 Minute, 6 Second

வன்னியில் இரத்தஆறு ஒன்று ஒடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணிநேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசர கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்து விடவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததையடுத்தே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகள் சரணடையா விட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை ஜனாதிபதி அறிவிக்காத போதிலும் ஒரு இரத்தஆறு ஓடலாம் என நியுயோர்க்கைக் தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்வாளரான அனா நிஸ்டால் தெரிவித்திருக்கிறார். இந்தப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்வதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணிநேரமே உள்ளது என அவர் நேற்று வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிலையத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் தெரிவித்தார். தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களை படுகொலை செய்வது போர்க்குற்றங்களாக கருதப்படும் என்பதையும் இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் தளபதிகள் உட்பட அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “உரிமைகள் காப்பகம் அவசர அழைப்பு

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    எங்கள் பிழைப்பை சூறையாடி எங்கள் பிள்ளைகளை புதைகுழிக்குள் அனுப்பி பிலிம் காட்டிய பீலாபிரபாகரன் பங்கருக்குள் இருந்து கொண்டு உள்ளுக்குவிட்டு அவசரமாக அடிக்கோனுமாம். மதிவதனியும் பக்கத்தில் இல்லையாம் உள்ளுக்குவிட்டுத்தான் அடிக்காட்டியும் குறைந்தபட்சம் அவசரமாக வெளியில்விட்டாவது அடிக்கவேணுமாம். யாராவது உதவி செய்யுங்களேன். இதுதான் சத்தியம்மாக கடைசி அடியாம்

Leave a Reply

Previous post புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு
Next post வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை