By 22 April 2009 1 Comments

வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் இறுதிக்கட்ட போராட்டம் காரணமாக சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது இராணுவத்தினரின் தொடர்ச்சியான தாக்குதலாலும் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதினாலும் சிறுவர்கள் உயிரிழக்ககூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த யுத்தம் காரணமாக கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்வடையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மோதல்கள் தொடர்ந்து இடம்பெறுமாயின் விடுதலைப்புலிகள் பொதுமக்களை மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுத்தால் மேலும் பல சிறுவர்கள் உயிரிழப்பார்கள் என யுனிசெப்பின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் டானியல் டூல் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றி குறித்து காட்டும் முனைப்பை விட சமாதானத்தை வென்றெடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் அதிக அக்கறை காட்ட வேண்டுமென யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காணப்படும் அகதி முகாம்களில் சன நெரிசல் அதிகரித்து செல்வதாகவும் இதனால் அகதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை நிவாரணங்களை வழங்குவதற்கு 3.5மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் யுனிசெப் அறிவித்துள்ளது.1 Comment on "வன்னியில் இறுதிக்கட்டமோதலில் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் -யுனிசெப் எச்சரிக்கை"

Trackback | Comments RSS Feed

 1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  போராட்டத்திற்கான நியாயத் தன்மைகளை ஏகபிரதிநிதித்துவத்துக்குள் குழிதோண்டிப் புதைத்த புலிகளும் புதினம் பாத்துக் கொண்டிருந்த முதலைகளும் சேர்ந்து விட்ட வரலாற்றுத் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  மஞ்சள் கயிற்றுக்கு கழுத்தறுப்பவன் சிங்களவன் என நான் சின்ன வயதில் கதைப்பதை கேள்விப்பட்டது. அரசியல் அறிவே இல்லாத இவர்களுக்கு இந்தகதையை சொல்லிக்கொடுத்தவர்கள் யார்? நிச்சியம்எமது அரசியல்வாதிகளே இதில் இனவெறி கருத்தில்லையா? தமது பதவிகளுக்காக இனவெறி கருத்துக்களை வளர்த்துவிட்டு பெரும்பான்மை மக்களிடம் இனவெறி இருப்பதாக குற்றம் சுமத்தினால் எப்படி? எல்லோரும் ஏதோ ஒரு தீர்வுதிட்டத்தின் அடிப்படையில்தான் போராட்டம் நடத்துகிறார்கள் அது பிரபாகரனின் குரும்பட்டிதேர் தமிழ்ஈழம் அல்ல அதைவிட மேன்மையானது. தமிழ்மக்களை பாதுகாப்பது அவர்களுக்கு வாழ்வை தேடிக்கொடுப்பது ஐக்கியப்பட்ட வாழ்வை முன்நிறுத்துவது.
  தமிழ்மக்களுக்கு முதல் தேவைப்படுவது புலிகளின் சங்காரமும்-அழிவுமே!
  ஜே.ஆர்.-ஜயவர்தனா பிரேமதாஸ ரணில் விக்கிரசிங்காகள் போன்றவர்களிடம் இருந்து மகிந்தராஜபச்சாவிவை வித்தியாசம் காணமுடியாதது பல தமிழரிடம் உள்ள பரிதாபநிலை.
  புலிகளோ , தமிழ் தலைமைகளோ கொண்டு வராத ஒரு தீர்வையும் , தமிழர் மனங்களை வென்றெடுக்கும் முயற்சியையும் மகிந்த செய்ய முயல்கிறார் என்பதையும் அண்மைக் கால நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெரிகிறது.
  மகிந்த தரப்பால் அவருக்கு எதிரானவர்களை விட ஏனைய தமிழரிடத்தில் அன்யோன்யமாகவே இருக்கிறார்.ஒரு நாட்டில் பல காலமாக புரையோடிப் போயிருக்கும் ஒரு பூதாகரமான இனப் பிரச்சனையை தீர்க்க “மயிலே மயிலே இறகு போடு” தன்மை சரி வராது. ஒரு தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைமை தேவை. அது மகிந்தவாக இருக்கும் என்று பிரபாகரனைத் தவிர வேறு எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதனால்தான் மகிந்த ஜனாதிபதியாக பிரபாகரன் உதவினார்.
  மகிந்த மற்றும் மகிந்தவை சுற்றியுள்ளவர்கள் அனைவரும் இதுவரை இல்லாத ஒரு பரிமாணத்தில் சிந்திக்கிறார்கள். யாரை வைத்து எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக நகர்த்துகிறார்கள். உலகத்தையே தம்மால் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவரது சாணக்கியம் உயர்ந்திருக்கிறது என்றால் லோக்கல்கள் எம் மாத்திரம்?
  மகிந்த கீழ் மட்டத்தில் இருந்து உயர் நிலைக்கு வந்தவர். உயர்குல சிங்களவர்களைத் தவிர தெற்கு சிங்களவர்கள் எவருமே அரசியலில் ஒரு உயர் நிலைக்கு வராத தன்மையே இருந்தது.பிரேமதாஸ கூட கொழும்பு மக்களின் பலமும் , வாய் பேச்சு வல்லமையும் , சில பிடிகளையும் வைத்துக்கொண்டு ஜேஆரை மிரட்டியே தன்னை உயர்த்திக் கொண்டார்.
  கண்டி உயர் குல சிங்களவரிடமிருந்து இம் முறைதான அதி உயர் பதவியொன்று கீழ் மட்ட சிங்களவர்களுக்கு எட்டியுள்ளது. தவிரவும் மாத்தறை பகுதியில் வாழும் தமிழ் – முஸ்லீம்களது பலம் பலவீனம் என்பதை நன்கே அறிந்தவர் மகிந்த. ஆரம்ப காலம் தொட்டே தமிழர்களோடு மிக நெருக்கமாகவே மகிந்த இருந்து வந்துள்ளார். அதனால் அவர் தமிழ் பேசுவதை விட தமிழ் நன்றாகவே புரியும்.
  இதுவரை இலங்கையில் ஆட்சி செய்த எந்த ஒரு தலைமையின் உறவும் படைகளில் தலைமைத்துவத்துடன் இருந்தததேயில்லை. அது அவர்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க பாதகமாகவே இருந்தது. எந்த ஒரு உறுதியான முடிவுவை எடுக்கவும் அச்சத்துடனே எடுக்க வேண்டி இருந்தது. அந்த அச்சமேயில்லாது முடிவெடுக்கும் ஒரு தலைவராக மகிந்த இருப்பதற்கு கோட்டாபய காரணமாக இருக்கிறார். மக்களை அணுகி சமயோசிதமாக காரியங்களை சாதிக்கும் திறனுடன் பசில் இடம் இருப்பதால் , அதற்காகவும் கீழ் மட்ட அதிகாரிகளை நாட வேண்டியதில்லை.
  சிங்களவர்களே அஞ்சும் அளவுக்கு மகிந்தவின் பலம் இருப்பதால்தான் ஜேவீபீ கூட அளவோடு கோஸம் போடுகிறது. எல்லை தாண்டினால் பேச வேண்டியவை பேசும். ஜேவீபியை மட்டுமல்ல ஐதேக பல கூறுகளாக சிதறியே இருக்கிறது. சிங்கள தேசியவாதம் பேசும் கெல உறுமய கூட அடக்கியேதான் வாசிக்கிறது.
  தற்போதைய நிலையில் வன்னியை மீட்பதுடன் அந்த மக்கள் மனங்களை வெல்லும் பணியை மகிந்த அரசு சார்ந்தவர்கள்தான் செய்கிறார்களே ஒழிய வேறு எந்த தமிழ் கட்சியும் அதற்குள் செல்லவே இல்லை.
  சுனாமி காலத்தில் புலிகள் முக்கியமாக கடைப்பிடித்த ஒரு விடயம் , அரச மற்றும் ஏனைய நாடுகள் கொடுத்த உதவிகளை அவர்கள் பொறுப்பேற்று மக்களுக்கு பகிர்ந்தளித்தார்களே தவிர நேரடியாக அவர்களுக்கு அந்த உதவிகளை வழங்க சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. பாதிப்புக்கு உள்ளான மக்கள் பெற்ற உதவிகளை புலிகள் வழங்கியதாகவே பெரும்பாலான பொது மக்கள் நம்பினர். இதை அங்கு சென்று பணியாற்றியவர்களால் நேரடியாகக் காண முடிந்த காட்சிகள். முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு SLMயைத் தவிர வேறு எவரையுமே புலிகள் செல்ல அனுமதிக்கவே இல்லை.
  அதையே மகிந்த பின்பற்றுகிறார். நேரடியாக எவரையும் இடைத் தங்கல் முகாம்களுக்கோ அல்லது ஏனைய பகுதிகளுக்கோ சென்று உதவுவதை கட்டுப்படுத்தியே வருகிறார். இதனால் அரசே பாதக்கப்பட்ட மக்களுக்கு உதவியதான தன்மையை உருவாக்குவதோடு , தேவையற்ற பிரசாரங்களையும் தடுப்பதற்கு அது வழி செய்துள்ளது.
  “வன்னியில் இருக்கும் மக்கள் அனைவரும் புலிகள்.அவர்களை மீட்க எதற்காக நம் வீரர்களை பலி கொடுக்க வேண்டும்” என மகந்தவிடம் கெல உறுமய கூறிய போது “அங்கே புலிகள் கொஞ்சம். அப்பாவிகள் அதிகம். அவர்களும் இந்நாட்டின் மக்கள்.அவர்களுக்கும்தான் நான ஜனதிபதி” என கடிந்துள்ளார்.
  ஏற்கனவே கெல உறுமய புத்த பிக்குகளுக்கு ஜேவீபீ ஊடாக மகந்த தாக்குதல்களை தொடுத்தார் என்பது கெல உறுமயவுக்கு தெரியும். அவர்களையும் இரண்டாக பிளவு படுத்தினார். இன்று அதைச் செய்த ஜேவீபியினருக்கும் அதே தாக்குதல் தொடரவே செய்கிறது.
  எனவே தமிழருக்கான அதிகார பகிர்வோ அல்லது தீர்வோ மகிந்தவால் வரும் என நம்பலாம். அவரை எதிர்க்க தமிழன் என்ன? சிங்களவனே நிற்க மாட்டான்.
  பலமான ஒரு தலைமை இல்லாத போது ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது.
  அது சர்வாதிகாரமாகவோ அல்லது அதன் தன்மையோடோ இருத்தல் வேண்டும்.
  இலங்கை சரித்திரித்திலேயே மகிந்த போன்ற பலமான ஒரு தலைவன் இல்லாமை தமிழர் -முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சிறீலங்காவின் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக மனித பிணங்களின் மீது சவாரி செய்யும் ஒரு அரசியலாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

  புலன் பெயர்ந்த தமிழரே
  அகதிகளாக வ்திப்பிட் அனுமதி பெற்று, குடு குடு ஆச்சி மாரையும் கூப்பிட்டு வீட்டிலைவைத்து அரச உத்வியில் வாழவைத்தவர்கள். பிடித்த கள்ள ஆட்டை மறந்தீரோ, மூன்று இடத்தில் பதிந்து எடுத்த அகதிப் பண்த்தை மறந்தீரோ கள்ள ரெலிபோன் காட்டையும், கிரெடிகாட் மோசடியையும் மறந்தீரோ.
  வாழும்நாட்டிற்கு செய்தநன்மை ஒன்றையாவது சொல்லுங்கோ.
  சொல்ல வேண்டாம் முதலில் வழியை விடுங்கோ பஸ் போக.

Post a Comment

Protected by WP Anti Spam