By 23 April 2009 1 Comments

புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனையோரும் நடுங்கிய காலம் மலையேறி விட்டது -ஜனாதிபதி

புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனை யோரும் நடுநடுங்கிய காலம் மலையேறிவிட்டது. நாட் டைச் சீரழிந்த புலிகள் அழியும் காலமிது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்தமொன்றை ஏற்படு த்தத் துணிந்ததால் நாட்டின் ஆயிரக்கணக்கான இளைஞ ர்கள் தம் உயிரைப் பலியாக்க நேர்ந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தொழிற் பயிற்சி அமைச்சின் ஏற்பாட்டில் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் இளைஞர் யுவதிகள் ஜனாதி பதியைச் சந்திக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல ந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :- பதினேழு கிலோ மீற்றரில் அமைந் துள்ள பாதுகாப்பு வலயத்தினுள் எமது படையினர் பிரவேசித்து புலிகளின் பிடியிலிருந்த தமிழ் மக்களை மீட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் தற்போது அரச பராமரிப்புப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். தமிழ் மக்களை மீட்க படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது புலிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியிலும் தப்பியோடி வந்த தமிழ் மக்கள் படையினரைக் கட்டியணைத்து அழுதனர். அதனைத் தொலைக்காட்சிகளும் எமக்குத் தெளிவுபடுத்தின. இலங்கையை ஐக்கியப்படுத்த இன்னும் சில மணித்தியாலங்களே உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 30 வருடத்திற்குள் பிறந்த ஒருவர் பயங்கரவாத யுத்த அச்சத்துடனேயே வாழ்ந்துள்ளார். புலிகள் என்றாலே நடுநடுங்கிய இந்நாட்டை ஆட்சிசெய்த தலைவர்களை நினைத்தால் எமக்கு மிகுந்த கவலையாக உள்ளது.

நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் முயற்சித்திருந்தால் பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகளைத் தடுத்திருக்கலாம். அதனை விடுத்து தலைவர்கள் புலிகளுடன் யுத்த நிறுத்தம் மேற்கொண்டதனால் எமது இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகவே அது வழிவகுத்தது.

ஒரே தேசியக் கொடியின் கீழ் சகல மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கித் தரக்கோரியே நாட்டு மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதற்கிணங்க புலிகள் வசமிருந்த 15,000 சதுர கிலோ மீற்றர் நிலத்தை எம்மால் மீட்க முடிந்துள்ளது.

நாம் தமிழ் மக்களைப் படுகொலை செய்கிறோம் எனவும் நாட்டில் சுதந்திரம் மனித உரிமை இல்லாமல் போயுள்ளதாகவும் சர்வதேச சமூகங்களிடம் கூறி எமக்குக் கடன் வழங்க வேண்டாமென எதிர்க்கட்சியினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் பிடியிலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு உணவு இருப்பிடம் சம்பந்தமான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் ரணில் விக்கிரமசிங்க என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். அதுதான் அவருக்கும் எனக்குமுள்ள வித்தியாசம். நான் ஒரு காமெடி நடிகராக இருக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.1 Comment on "புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனையோரும் நடுங்கிய காலம் மலையேறி விட்டது -ஜனாதிபதி"

Trackback | Comments RSS Feed

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    மக்கள் அளிக்கின்ற வாக்குமூலம் அங்குள்ள நிலைமைகளை மேலும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. புலிகள் சர்வதேச முன்னறலில் அம்மணமாக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் புலி பினாமிகள் புலம்பெயர் நாடுகளில் தலையால் மண்கிண்டிய போராட்டங்கள் எல்லாம் பிசகிப்போனது.

    உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிவந்துள்ள அம்மக்கள் சாவை மிக நெருங்கிவந்திருக்கிறார்கள். அவர்களின் உற்றார் உறவினர், அயலவர் தெரிந்தவர்கள் தம் பிள்ளைகளைக்கூட இழந்த நிலையில் உயிர்வாழும் நம்பாசையில் வந்துசேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் நமக்கு நெஞ்சைத் துழைத்து உயிரைக் குடித்து வெளியேறுகிறது.

Post a Comment

Protected by WP Anti Spam