புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் காலை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்..

Read Time:4 Minute, 55 Second

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகிய இருவரும் நேற்றுக் காலை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்துள்ள இராணுவ த்தின் 58வது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களுடன் சேர்ந்து, இதுவரை சுமார் மூவாயிரம் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பெருந்தொகை யான மக்களோடு மக்களாகவே வருகை தந்து இவர்கள் இருவரும் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறை பொறுப்பா ளராகவும், பேச்சாளராகவும் செயற்பட்டவர். 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி பருத் தித்துறை, புலோலி மேற்கு தம்பச்சிட்டியில் பிறந்த இவர், ஒரு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தவர். புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒரு வரான இவர், பல வருடங்களாக புலிகளின் ஊடகப் பேச் சாளராகப் பணியாற்றி வந்தார். சமாதான உடன்படிக்கை காலத்தில் புலிகளின் பேச்சா ளராகவும் தென்பகுதி ஊடக நிறுவனங்களுக்கு புலிகளின் சமாதான செயலக நடவடிக்கைகள், பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களின் விபரங்களை வழங்கியவர். ஜோர்ஜ் மாஸ்டர் என்பவர் புலிகள் இயக்கத்தின் முன் னாள் அரசியல் துறை பொறுப்பாளரான சு. ப. தமிழ்ச் செல்வனின் மொழிபெயர்ப்பாளராவார். அரசாங்க தபால் திணைக்களத்தின் முன்னாள் தபால் அதிபரான இவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாக ரனின் மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். தமிழ்ச்செல்வன் இறந்த பின்னர் புலிகளின் சில ஆவண ப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியாளராகவும் ஜோர்ஜ் செயற்பட்டுள்ளதாக பிரிகேடியர் குறிப்பிட்டார். புலிகளின் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டரும், ஜோர் ஜும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளமை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும், அவரது முக்கிய சகாக்களுக்கும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் சரணடைந்துள்ளதையடுத்து பிரபா கரனை நம்பியுள்ள எஞ்சியிருக்கும் புலிகளின் முக்கியஸ் தர்கள் பலரும் அடுத்து வரும் தினங்களில் படையினரிடம் சரணடையலாமென பாதுகாப்புப் படையினர் எதிர்பார்ப் பதாகவும் இரணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையி னரிடம் தஞ்சமடையுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை இவர்கள் ஏற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பெருந்தொகையான பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துகொண்டிருக்கும் அதேசமயம் தற் பொழுது புலிகளின் முக்கியஸ்தர் பலர் வர ஆரம்பித்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள எட்டு கிலோ மீற்றர் ஒடுக்கமான பிரதேசத்தை இன்னும் ஓரிரு தினங்களில் கைப்பற்றிவிட முடியும் என்றும் இரணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் என்றால் நாட்டுத் தலைவர்களும் ஏனையோரும் நடுங்கிய காலம் மலையேறி விட்டது -ஜனாதிபதி
Next post பாதுகாப்பு வலயத்தில் 1/3 பகுதி படையினரின் பூரண கட்டுப்பாட்டில்..