இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை -டி.கே.பி. தஸாநாயக்க

Read Time:1 Minute, 44 Second

விடுதலைப்புலிகளின் கட்டுப்ட்பாட்டுப் பகுதியிலிருந்து இரணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களின் நலன் கருதி கடற்படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி தஸாநாயக்க இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த இரு நாட்களில் கடற்படையினரிடம் 50000க்கு மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தஞ்சமடையும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல எமக்கு ஆறு மனி நேரம் தேவைப்பட்டது. புலிகளின் 100க்கு மேற்பட்ட தற்கொலைப் படகுகள் தாக்குதல்களை நடத்த வரும்போது பலவிதமான சிக்கல்களைக் கடற்படையினர் எதிர்நோக்க வேண்டியேற் படுகின்றது. இது தொடர்பில் பல யுத்தங்களை கடற் படையினர் கையாள்வதுண்டு கடல் வழியாகத் தப்பிவரும் மக்களில் காயமடைந்தவர்களின் நலன்கருதி அத்தியாவசிய வசதிகள் புல்மோட்டை கடற்தளத்தில் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்க்கக்கூடிய வகையில் கடற்படையினர் தயாரான நிலையிலேயே உள்ளனர் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இராணுவத்தினரிடம் தஞ்சமடையும் மக்களுக்கு உதவ கடற்படையினர் நடவடிக்கை -டி.கே.பி. தஸாநாயக்க

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    சமாதான காலத்தில் குடும்பத்தினரைப் பிணை வைத்துப் பாஸ் கொடுத்து வன்னி மக்களை மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு தடை விதித்தது யார்? அந்த மக்களை அன்று வெளியேற விட்டிருந்தால். தண்ணீர் வற்றிய மீன்கள் போல இன்று புலி கருவாடாயிருக்கும்

Leave a Reply

Previous post விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க பாலித்த கொஹன மலேசியா விஜயம்
Next post படை நடவடிக்கைகளுக்கு விமானப்படையினர் கண்காணிப்பு வழங்கி உதவி -ஜனக்க நாணயக்கார