By 23 April 2009 6 Comments

புலிகளின் மிக முக்கிய நபர்களில் ஒருவரும் நீதித்துறைப் பொறுப்பாளருமான பரா வவுனியா நலன்புரி முகாமில் மக்களோடு மக்களாக வந்து தஞ்சம்!!

lttepararajasingamதமிழர்களுக்கான போராட்டம் என்ற மயக்கு வார்த்தைக்கு மதிமயங்கி, தன்னையும் புலியாக இணைத்துக் கொண்டு, பிரபாவின் அதிகாரவெறிக்கு கட்டுப்பட்டிருந்ததினால், பிரபாவினால் புலிகள் இயக்கம் சீர்குலைக்கப்பட்ட போதும், தற்போதைய தோல்விகளுக்கு பிரபாவே காரணமான போதும் அதனை வாய்திறந்து சொல்ல முடியாது தவிர்த்து வந்த ஒருவரின் கதைதான் இது. பிரபாகரனுக்கு ஆலோசனை தெரிவித்து அடிவாங்கவும் முடியாது, அதற்காக பிரபாகரனின் பின்னாலேயே நின்று வெடிபட்டு சாகவும் முடியாது என்ற காரணத்திற்காக மக்களோடு மக்களாக வந்து தானும் ஒரு தமிழ் மகனே என்று முகாமொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலி முக்கியஸ்தர் ஒருவரின் கதைதான் இது. யாரவர் என்று குழப்பமாக இருக்கிறதா? அவர்தான் புலிகளின் முக்கியஸ்தரும், நீதித்துறைக்கு பொறுப்பாளருமான பரா எனும் பரராஐசிங்கம் ஆவார். இது உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமே இல்லை. நேற்று, எமது அதிரடி நிருபர் ஒருவர் வன்னி நலன்புரி முகாமிற்கு சென்று தகவல் சேகரித்துக் கொண்டிருந்த போதே எமது நிருபரிடம் சிக்கியிருக்கிறார் பரா. (எமது அதிரடியின் நிருபருடன் சென்ற நண்பருக்கு மிகவும் பழக்கமானவர் பரா) நேற்றுமுந்தினம், என்றுமில்லாதவாறு பெருந்தொகையான மக்கள் கூட்டம் இடம்பெயர்ந்து பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வந்தது யாவரும் அறிந்ததே. அந்த சந்தர்ப்பத்திலேயே தானும் மக்களோடு மக்களாக வந்ததாகவும் தன்னை படையினர் அடையாளம் கண்டு கொள்ளவில்லையெனவும், ஒருவேளை அவர்களுக்குத் தன்னை தெரியாதிருக்கலாம் எனவும் கூறிப் பேச்சைத் தொடர்ந்துள்ள அவர், தொடர்ந்தும் தெரிவிக்கும் போது, இனி புலிகளினால் தப்பிப்பதென்பது முடியவே முடியாத காரியம். அது வெளிப்படையாகவே பலருக்கும் விளங்கிக் கொண்டிருக்கின்றது. அதனாலேயே, அண்மையில் தயா மாஷ்டரும், ஜோர்ஜும் கூட சரணாகதியடைந்திருந்தார்கள் என நினைக்கிறேன். தான் இங்கு தங்கியிருப்பது வேறுயாருக்கும் தெரியாது. மக்களோடு மக்களாக வந்த பரபரப்பினால் என்னை யாரும் அடையாளம் காணவில்லை. புலிகளின் போர் முடிவுற்று விட்டது. தான் பட்டதெல்லாம் போதும், இந்தப் பதவி, பகட்டு எதுவுமே வேண்டாம். நிம்மதியாக கடைசிக்காலத்தைக் கழித்தால் போதும் என்ற நிலையிலேயே நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கின்றார். ஆக, புலிகளின் கழுத்துப்பகுதி அந்தஸ்த்துடைய நபர்களெல்லாம் சரணடைந்தும், மக்களோடு மக்களாக தஞ்சடைந்தும் கொண்டு வருகிறார்கள். இனி முகமாக இருக்கும் முக்கிய தளபதிகளும், கடைவாய்ப்பல்லாக இருக்கும் தலைவரும் அவரது வெட்டும்பல், வேட்டைப்பல்லுகளும் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அவர்களது நிலையும் இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும் போல் தெரிகின்றது. புலிகளின் நீதித்துறைப் பொறுப்பாளர் பரா மனநிலை மாற்றம் வேண்டி தன்னை இனம்காட்ட வேண்டாம் எனவும், தனது அடைக்கல இடத்தினை அறிவித்துவிட வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டதன் பேரிலேயே, அவர் தங்கியிருக்கும் முகாமும், மற்றும் அவரை அடையாளம் காண்பிக்கும் விபரங்களும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்று கூறிக் கொள்ளுகின்றோம். பராவிற்கு வந்த புத்தி மற்றப் புலிகளுக்கும் வந்தால் வாழவும் முடியும், நிம்மதியாக சாகவும் முடியும். அதுவன்றில், அநியாயமான உயிரிழப்பும், நிம்மதியில்லாத மன உறுத்தலுமே மிஞ்சுமன்றி வேறென்ன… (அதிரடியின் வவுனியா நிருபர்)
Thanks… www.athirady.com6 Comments on "புலிகளின் மிக முக்கிய நபர்களில் ஒருவரும் நீதித்துறைப் பொறுப்பாளருமான பரா வவுனியா நலன்புரி முகாமில் மக்களோடு மக்களாக வந்து தஞ்சம்!!"

Trackback | Comments RSS Feed

 1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  ஈரோஸ் பரா ஒரு பிழைக்க தெரிந்த சுழியன். தன் பிழைப்புக்காக யார் பதவியில் பலமாக இருக்கிறார்களோ அவர்களின் காலைப்பிடித்து தான் வசதியாக வாழத் தெரிந்தவன். இவன் வெகு விரைவில் ராஜபக்சேயின் காலில் விழுந்து பதவி ஏதும் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  ராணுவத்திடம் சரண் அடைந்த ஜார்ஜ் என்று அழைக்கப்படும் வேலுப்பிள்ளை குமாரு பஞ்சரத்தினத்தின் மகள் லண்டனில் பல வங்கிகளை சுத்தி சுருட்டிக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு ஓடித் தப்பிவிட்டாள்

 2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  பச்சோந்தி பரா புலியில் சேர்ந்து பலருக்கு தகடு கொடுத்தவன். இவன் பகிரங்கமாக நடுச்சந்தியில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களால் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டிய பேர்வழி. பராவின் தகவலில் புலி படு கொலை செய்தவர்கள் எனக்கு தெரிந்த வரை முப்பத்து எழு

 3. பரணி says:

  38வதாகா உன்னையும் சேத்துக்கொள்ளு லூசு சபாரத்தினம்.

 4. ஒட்டக்கூத்தன் says:

  ஆண்ட தமிழினம் ஆழத் துடிக்கிறது என்ற தீயில் குளிர்காய்ந்தது பிரபாகும்பல் மட்டும்தான். மற்றவர்களை குளிர்காய விட்டால்தானே! சேர மன்னர்களின் அடுத்த வாரிசு எனக் கூறிச் சோரம் போனது பிரபா கும்பல்.
  என்னே ஒரு இராஜ்யம்?
  புலிக் கொடி, சுற்றிவரக் காவல், பதுங்குகுழி அந்தப்புரங்கள், மன்னன் மகாராணி இளவரசன் இளவரசி மற்றும் தளபதிகளின் ஜலக் கிரீடைக்காய் நீச்சல் தடாகம், அரண்மனை விகடகவி சூனா பானா, புலவர் புதுவை ரத்னதுரையின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி மக்களின் வரிப்பணத்தில் வயிறுவளர்த்த மாமன்னன் பிரபா…. நாடெனும் மணிமகுடம் இழந்தான்!
  அன்று மதுரை எரிந்தது கண்ணகியின் சாபத்தினால்…
  இன்று தமிழீழம் எரிகிறது… தமிழ் அன்னையர்களின் சாபத்தினால்…

 5. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

  பற நீ !

  என்றாலும் உனது பழைய ஈரோஸ் தோழர் பரா மீது இவ்வளவு பாசமா?

  பச்சோந்தி பரா ஈரோசில் இருக்கும்போதே ஆறு பேரை மண்டையில் போட்டது உனக்கு தெரியுமா?
  பரா றோவின் கைக்கூலியாக இருந்தது உனக்கு தெரியுமா ? றோவின் கைக்கூலியாக இருந்ததால் தான் புலியால் ஈரோஸ் தடை செய்யப்பட்டது உனக்கு தெரியுமா?

  இருந்து பார் ! பரா புலிகளை காட்டி கொடுத்து தப்பி வந்த எத்தனை புலி ஆமியிடம் மாட்டபோகுது என்று பார் !

  பற நீ ! நீ உண்மையான புலி என்றால் அப்போது பராவை மண்டையில் போடு !

 6. நக்கீரன் says:

  யாரும் யாரையும் மண்டையில் போட வேண்டாம்..போட்டது போதும்…
  மன்னிப்பு….மறு வாழ்க்கை…..பிரபாகரனுக்கும் அது பொருந்தும்….

Post a Comment

Protected by WP Anti Spam