By 23 April 2009 2 Comments

தடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்..

ltteவளையர்மடம் தேவாலயத்தை புலிகள் இயக்கத்தினர் தங்களது நிலைகளில் ஒன்றாக உபயோகித்து வருகின்றனர் என்ற தகவல் ஏலவே கிடைத்திருந்ததே. ஆனால், அதுபற்றிய புதிய தகவல் ஒன்று அண்மையில் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதாவது, வளையர்மடம் தேவாலயத்தில் நிலை கொண்டிருந்த புலியுறுப்பினர்களின் காதுகளுக்கு படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் பற்றியும், அதன்காரணமாக புலிகளுக்கு ஏற்படுகின்ற பாரிய உயிரிழப்புகள் பற்றியதுமான தகவல்கள் எட்டியிருக்கின்றன. இந்தச் செய்திகளினால் தடுமாறி, பீதியடைந்த புலியுறுப்பினர்களின் 150 க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வளையர்மடம் இருப்பைவிட்டு தப்பித்துள்ளனர். இதனையறிந்த புலிகளின் மூத்த உறுப்பினர்கள் குழு வெறிகொண்டு வளையர்மடம் தேவாலயத்தை முற்றுகையிட்டு ஏனையோரை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், தப்பியோடிய புலிகளை உடனடியாக வந்து இணைந்து கொள்ளுமாறும், இல்லையெனில், தப்பியோடிய அனைவரையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் நாங்கள் இறங்க வேண்டியிருக்கும் என்றும் மூத்த புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வறிவித்தல் கிடைக்கப் பெற்ற தப்பியோடிய புலிகள் மூத்த புலியுறுப்பினர்களுக்கு வோக்கி டோக்கி மூலம் விடுத்துள்ள தகவலில், நாங்கள் தெரிந்து கொண்டே விட்டில் பூச்சிகளாக அரசபடையினரின் குண்டுகளுக்கு தீனியாக விரும்பவில்லையென்றும், எங்களது தருணம் வரும்வரை நாங்களும் பின்வாங்க எண்ணியுள்ளதாகவும் தகவல் அனுப்பியுள்ளனர். அத்துடன் தமக்கெதிராக மூத்த புலியுறுப்பினர்கள் பலாத்காரமாக தாக்குதல்களை மேற்கொள்ளுமிடத்து தாங்களும் திருப்பித் தாக்க தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, எம்முடன் தாக்குதல் நடத்தும் எண்ணத்தை மூத்த புலிகள் கைவிட்டுவிட்டு, அரசபடைகளின் பலம் குண்றிய வேளைகளைப் பயன்படுத்தி நாங்கள் தாக்குதல் நடத்தும் சமயம் அவர்களும் தாக்குதல் நடத்தட்டும் என்று பெரும் புலிகளுக்கே இந்த தப்பியோடிய புலிகள் புத்தி புகட்டியிருப்பது, வளையர்மடம் தேவாலய முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மூத்த புலிகளுக்கு கடுமையான விஷரைக் கிளப்பியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

Thankyou… www.athirady.com2 Comments on "தடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்.."

Trackback | Comments RSS Feed

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    புலிகள் மக்கள்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள், கூடவாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்று தூக்கத்திலிருந்த சிங்கள முஸ்லீம் மக்களை கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பதபதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும்

  2. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலி போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான் முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.

    தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டான்

    கேம் ஓவர்

Post a Comment

Protected by WP Anti Spam