பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே பிரபாகரன் மறைந்திருக்கின்றார் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு தெரிவிப்பு

Read Time:3 Minute, 1 Second

anitiger0201விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திலேயே மறைந்திருக்கின்றார் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தை நெருங்கிச் செல்லும்போது அவர் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சிக்கலாம் என இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார் பிபிசியின் சிங்கள செய்தி சேவையான சந்தேசிய சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் பின்வரும் விபரங்களை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே மறைந்து இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன அதுவும் 8கிலோ மீற்றர் நீளமும் 1.5கிலோ மீற்றர் அகலமும் கொண்ட கடற்பகுதியிலேயே மறைந்துள்ளனர். அரசாங்கம் எங்களுக்கு வழங்கியுள்ள கடமைகளுக்கு அமையவும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமையவும் நாங்கள் மேற்கொண்டிருந்த பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்கிறோம் பயங்கரவாதிகள் மனித கேடயமாக வைத்திருந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களை விடுவிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது இந்த பொறுப்பை நிறைவேற்றும் அதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்.
கேள்வி: பாதுகாப்பு வலயத்தில் இன்னும் எத்தனை பொதுமக்கள் சிக்கியுள்ளனர்
பதில்: இன்னும் சுமார் 15ஆயிரம் மக்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என நினைக்கிறேன்
கேள்வி: புலி உறுப்பினர்கள் எத்தனைபேர் உள்ளனர்
பதில்: சுமார் 300,400 புலிகளே அங்கு இருக்கின்றனர் பலவந்தமாக ஆயுதம் கொடுக்கப்பட்ட பொதுமக்களும் அதில் இருக்கின்றனர்
கேள்வி: இராணுவத்தளபதி என்றவகையில் பிரபாகரன் அந்த பகுதியில்தான் இருக்கிறார் என்று கூறுகிறீர்களா
பதில்: ஆம் இன்னும் அந்தப் பகுதியில் மறைந்து இருக்கிறார் சுமார் 8கிலோ மீற்றர் பரப்பளவு அவர்கள் வசம் இருக்கிறது இராணுவத்தினர் நெருங்கி செல்கின்ற போது அவர் படகு ஒன்றில் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே பிரபாகரன் மறைந்திருக்கின்றார் -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி.பி.சி.க்கு தெரிவிப்பு

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    A lot of the LTTE’s viciousness and destructiveness was directed not at the so-called Sinhala enemies but within the Tamil political movement itself, targeting and eliminating courageous and visionary leaders such as K. Pathmanabha, Viswanandadevan whose lives were entirely devoted to the Tamil ethnic cause.

Leave a Reply

Previous post பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒரு சில மணி நேரமே உள்ளது -ஜனாதிபதி
Next post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க