சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22தமிழர்கள் நீர்கொழும்பில் கைது

Read Time:2 Minute, 3 Second

சட்டவிரோதமான முறையில் நீர்கொழும்பு கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லமுயன்ற 22பேரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவரிடம் தலா ஐந்துலட்சம் ரூபா அறவிடப்பட்டுள்ளது காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடன் இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்த விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு;ள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் கைதுசெய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அரசியல் தஞ்சம் கோரியும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை உயர்வடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 22தமிழர்கள் நீர்கொழும்பில் கைது

  1. Hello Editor:

    Why you say “22 Thamilar” instead of “22 Sri Lankans?” or “22 Tamill speaking Sri Lankans?”

    SriLankan Tamil

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை -ரணில் விக்கிரமசிங்க
Next post இலங்கை விவகாரம் குறித்து மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்த ஐ.நாவிற்கு உரிமையில்லை -இலங்கை அரசாங்கம்