போர்ப்பிரதேசம் செல்ல ஐ.நா குழுவை அனுமதியோம்.. பான் கீ மூன் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பு

Read Time:2 Minute, 2 Second

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தனக்கு கவலையளிப்பதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார் போர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கண்காணிக்க ஐ.நா சபை குழுவை அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இந்தக்குழு போர்நடக்கும் பாதுகாப்பு பகுதிக்குள்ளேயே சென்று கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது போர்ப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது இந்த நிலையில் அங்கு ஐ.நா மனிதாபிமான குழுசெல்வது நல்லதல்ல பொருத்தமானதல்ல அந்தகுழு போர்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறும் மக்களுக்கு வேண்டுமானால் உதவலாம் அரசுக்கும் உதவலாம் எனினும் அங்கு செல்ல ஐ.நா குழுவை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அங்கு தற்போது செஞ்சிலுவைச் சங்கம் காயம் அடைந்தவர்களை வெளியேற்றி வருகிறது பாதுகாப்பு பகுதியின் தென்பகுதியை நோக்கி இராணுவம் மெதுவாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது கனரக ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை துப்பாக்கிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோதல் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களுக்கு எவ்வித உதவியும் தேவைப்படவில்லை -பாலித கொஹன
Next post இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியவர்களை ஆதாரங்கள் இருந்தும் கைது செய்யாத நோர்வே