ஜனாதிபதியுடனான இந்திய உயர்மட்டத்தினரின் சந்திப்பில் போர்நிறுத்தம் பற்றி பேசப்படவில்லை-ஜனாதிபதி ஆலோசகர்

Read Time:1 Minute, 54 Second

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுச்செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது போர்நிறுத்தம் குறித்து பேசப்படவே இல்லையென்று ஜனாதிபதியின் செயலாளரும், இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். வன்னி நிலை தொடர்பாக அவசரப் பேச்சுக்களை நடத்தவென இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். வன்னியில் தொடரும் போரால் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பான இந்தியாவின் கவலையை வெளிப்படுத்திய இவர்கள், உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென அழுத்தம் கொடுப்பார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் 90 நிமிடங்கள் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் இதுபற்றி பேசப்படவில்லை. முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்தோர்க்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இந்தியத் து}துக்குழுவினருடன் முக்கியமாக பேசப்பட்டதுடன் அதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென்பதில் இந்தியத் தரப்பு அக்கறை காட்டியது என்றும் ஜனாதிபதியின் செயலர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலி உறுப்பினர்கள் 52பேர் சரண்! : சரணடைந்தவர்களின் 23பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்!
Next post அவுஸ்திரேலியாவின் வடக்குக் கரையை சென்றடைந்த 56பேர் கைது