புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு

Read Time:1 Minute, 13 Second

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பட்ட புலிபாய்ந்தகல் கூழாங்காடு பகுதியில் வெட்டபட்டிருந்த ஆழமான கிணறு ஒன்றுக்குள் நேற்றுக்காலை தவறி விழுந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழு வயது, ஒன்பது வயது பத்து வயதுடைய மூன்று சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கிணற்றுக்கருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்த மண் திட்டு இடிந்து விழுந்ததால் கிணற்றுக்குள் விழுந்ததாகவும், இதனால் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வாழைச்சேனைப் பொலீசார் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்: போர்நிறுத்தமில்லை என்கிறது இராணுவம்
Next post மதுரங்குளி வேலாசி தோட்டத்தில் களவில் ஈடுபட்ட ஒருவர்மீது காவலாளி சூடு, ஒருவர் பலி