போர் நிறுத்தம் ஒன்றை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -.ஊடக அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு

Read Time:1 Minute, 34 Second

அனைத்துலக சமூகத்திடம் இருந்து எந்தளவுக்கு அழுத்தங்கள் வந்தாலும் போர் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப் படுத்தாது என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொழும்பில் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் அறிவித்தலை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி விட்டன எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இவ்வாறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் ஆயுதப்படையினருக்கு துரோகம் இழைக்கும் வகையில் போர்நிறுத்தம் ஒன்றக்கு உடன்பட்டு விட்டது என ஜே.வி.பி பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் அந்த தகவல் தவறானது எனவும் போர் நிறுத்தம் எதனையும் அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்டு யானையைக் குறிவைத்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி
Next post சுவீடன் வெளிவிவகார அமைச்சின் வீஸா விண்ணப்பம் மறுக்கப்படவில்லை -இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு